எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.31 ஊழல் முறைகேடுகள் தொடர்பாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றிவரும் கண் காணிப்பு அதிகாரிகளை உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டும். விதி களை மீறி கட்டட அனுமதி கொடுத்த அதிகாரிகள் மீது குற்ற வழக்கு மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

மேலும், ஊழியர்களின் சொத்துக் கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவர் தனது வீட்டின் முன் மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து ஒரு தனியார் மருத்துவமனைக்காக ஜெனரேட்டரை வைத்துள்ளனர் என் றும், அதை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிர மணியம் முன்னிலையில் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சென்னை மாநகராட்சியில் ஊழல் மலிந்துவிட்டது என்று நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி நேற்று இறுதி உத்தரவை பிறப் பித்தார்.

சென்னை மாநகராட்சியில் நடை பெறும் ஊழல்களை தடுப்பதற்கும், அவற்றை கண்காணிக்கவும் அமைக்கப் பட்டுள்ள மாநகராட்சி ஊழல் தடுப்புத் துறை முழுவதுமாக செயல்படவில்லை.

எனவே சென்னை மாநகராட்சியில் உள்ள கண்காணிப்புப் பிரிவின் அனைத்து அதிகாரிகளையும் உடனடி யாக மாற்ற வேண்டும். அவர்களுக்கு பதிலாக புதிய உத்வேகத்துடன் கூடிய நேர்மையான, கறைபடியாத கண்கா ணிப்பு அதிகாரிகளை நியமிக்க வேண் டும். இதை 4 வாரங்களுக்குள் டிஜிபி அமல்படுத்த வேண்டும்.

சென்னை மாநகராட்சி அனைத்து அலுவலகத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். அனைத்து அலுவலகங்களுக்கு முன்பும் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். புகார் பெட்டிக்கு வரும் புகார்கள் மீது சென்னை காவல்துறை ஆணையர் விசாரணை நடத்தி, தவறு செய்தவர் கள்மீது வழக்குப்பதிவுசெய்து நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

அது மட்டுமல்லாமல், மாநகராட்சி அலுவலகங்கள் முன்பு, “லஞ்சம் தேச நலனுக்கு எதிரானது. லஞ்சம் வாங்கு வதும் குற்றம், கொடுப்பதும் குற்றம்” என்றும், லஞ்சத்திற்கு எதிரான வாச கங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும். லஞ்சம் வாங் கக்கூடாது என்றும், லஞ்சம் கொடுக்க கூடாது என்றும் மக்களிடையே விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பத் திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தை காவல்துறை ஆணையர் செய்ய வேண்டும்.

ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவில் ரகசிய பிரிவை ஏற்படுத்தி, சட்டவிரோத கட்டட அனுமதி கொடுக் கும் அதிகாரிகள் குறித்து திடீர் சோத னைகளைச் செய்து தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் விதிமுறை களுக்கு முரணாக கட்டட அனுமதி வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு கட்டி டங்கள் மற்றும் விதிமீறல் கட்டிடங் களை 12 வாரங்களுக்குள் அகற்ற வேண்டும்.

சென்னை மாநகராட்சியில் உள்ள ஊழியர்கள் அனைவரும், தாங்கள் பணியில் சேர்ந்தபோது வைத்திருந்த சொத்துக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சொத்துக்கள் குறித்த விவரங்களையும், தற்போது அவர்களின் சொத்துக்கள், அவரை சார்ந்த குடும்பத் தினரின் சொத்து விவரங்களை மாநக ராட்சி ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும். அவர்கள் தாக்கல் செய்த சொத்துக்களில் உள்ள வித்தியாசங்களை ஆய்வு செய்து, அவர்கள் மீது மாநக ராட்சி ஆணையர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்ட விரோத கட்டடங்களுக்கு அனுமதி அளித்த இளநிலை பொறி யாளர்கள், உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், மண்டல அதி காரிகள் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு மற்றும் துறை ரீதியான நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நடவடிக்கையை மாநகராட்சி ஆணையர் 12 வாரங்களுக்குள் அமல் படுத்த வேண்டும். மேலும், இந்த உத்த ரவை அமல்படுத்துவது தொடர்பாகவும் சட்ட விரோத கட்டடங்கள், விதிமீறல் கட்டடங்கள் ஆகியவற்றை கண்டறிந்து அவற்றை அகற்றுவது தொடர்பாகவும் மாநகராட்சி ஆணையர் 4 வாரங்களுக் குள் ஆய்வு கூட்டம் நடத்த வேண்டும். இந்த உத்தரவுகளை அமல்படுத்தி 12 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளார்.

சுயநினைவுடன் பதில் தர வேண்டும்

நீதிபதி தன் உத்தரவில் மேலும் கூறியதாவது, ‘‘சென்னை மாநகராட்சி ஆணையர் அப்பாவி  என்றோ, அவருக்கு எதுவும் தெரியாது என்றோ இந்த நீதிமன்றம் நினைக்கவில்லை.  ஊழல் செய்தவர்கள் மீது, லஞ்சம் வாங் குபவர்கள் மீது அவர் ஏன் நடவடிக்கை  எடுக்கவில்லை? அவர் சுதந்திரமாக செயல்படாததற்கு தடையாக இருப்ப வர்கள் யார்?  சென்னை மாநகராட்சியில் லஞ்சம் ஏன் இன்னும் குறையவில்லை? இது தொடர்பாக  அவர்தான் சுயநினை வுடன் பதில் தரவேண்டும்’’ என்று கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner