எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதுரை, ஆக.31 திண்டுக்கல் லில் 3,000 ஆண்டு பழமையான பொருட்கள் கண்டெடுப்பு குறித்து தொல்லியல் ஆய்வு நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவிக்கை அனுப்பியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நெய்க்காரன்பட்டி வேலூரை சேர்ந்த நாராயணமூர்த்தி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டதாவது:

சமணர் படுகை, பிராமி எழுத்துக்கள் மற்றும் தொல்லி யல் ஆய்வுகளில் ஈடுபட்டுள் ளேன். கடந்தாண்டு திண்டுக் கல் அருகே பாடியூரிலுள்ள மலை போன்ற மேட்டுப் பகுதியில் நடத்திய ஆய்வில் 3 ஆயிரம் ஆண்டு பழங்கால ஆபரணங்கள், ஓடுகள், சிதில மடைந்த முதுமக்கள் தாழி, செப்பேடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன.

இந்த இடம் பண்டைக்கால போர்க்கள பகுதியாக இருந்தி ருக்கலாம். இங்கு ஆய்வு செய்தால் பழமையான நாக ரீகம் வெளிவர வாய்ப்புள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழ டியில் இருந்தது போன்று மனிதன் வாழ்ந்ததற்கான நாக ரிகம் வெளிப்படலாம். எனவே, இப்பகுதியில் தொல் லியல் துறை சார்பில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். தற்போது குறுகிய அளவிலான நிலப்பரப்பே அந்தப்பகுதியில் உள்ளது. இதனால், நீதிமன்றம் தலையிட்டு அறிவியல் பூர்வ மாக தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் மனு குறித்து மத்திய கலாச் சாரத்துறை செயலர், தொல் லியல் ஆய்வுத்துறை இயக்குநர் ஜெனரல், தமிழக தொல்லியல் துறை ஆணையர், தொல்லியல் ஆய்வுத்துறை பெங்களூரு கண்காணிப்பாளர் உள்ளிட்டோ ருக்கு அறிவிக்கை அனுப்ப உத்தரவிட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner