எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.31 தமிழில் எழுதப்பட்ட ‘நீட்’ தேர்வில் தவறாகக் கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு கருணை மதிப் பெண் அளிக்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக் கையை உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறித்து திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்தாவது:

“தமிழில் நீட் தேர்வு எழு திய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட முடியாது" என உச்சநீதிமன்றம் கூறியிருப்பது, நம்பிக்கை பாழாகி பாதிக்கப்பட்ட தமி ழக மாணவர்களுக்கு தாங்கிக் கொள்ள இயலாத ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. தொடர்ந்து பல்வேறு குளறு படிகளை உருவாக்கி, தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவையும், எதிர்காலத்தையும் சிதைத்து விட்டது. அதைவிட "ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்", "தொடர்ந்து நீட் தேர்வை தமிழகம் எதிர்த்து வருவதால் குழப்பம் செய் கிறார்கள்" என்றெல்லாம் ஒட்டு மொத்த தமிழக மாணவ சமுதாயத்தின் மீதும் சி.பி. எஸ்.இ. குற்றம் சாட்டியிருப் பது, மிகுந்த கண்டனத்திற் குரியது மட்டுமல்ல; - ஆதிக்க வர்க்கத்தின் ஆணவ மனப்பான் மையும், பிளவுபடுத்தி பேதப் படுத்தும் குணமும் அந்த அமைப்பில் குவிந்து கிடப் பதைக் காட்டுகிறது.

ஆகவே, தமிழக மாணவர் களுக்கு நீட் தேர்வு மய்யம் ஏற்படுத்தியது மற்றும் தமிழில் "நீட்" கேள்வித்தாள் மொழி பெயர்ப்பில் குளறுபடிகளைச் செய்து தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கியது உள்ளிட்ட குற்றங்களைச் செய்த சி.பி.எஸ்.இ. தலைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாண்புமிகு மத்திய மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சரை வலியு றுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner