எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, செப். 1- தமிழகத்தில் உள்ள 1,284 குழந்தைகள் நல இல்லங்களில் ஆய்வு நடத்த உள்ளதாக குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆர்.ஜி. ஆனந்த் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், திருச்சி யில் செய்தியாளர்களிடம் கூறியது:

தற்போதைய நிலையில், குழந்தைகள் நல இல்லங்களில் தங்கியுள்ள குழந்தை களுக்கு உளவியல்ரீதியிலான ஆலோசனை களை வழங்கிடுவது அவசியம் என்பதால் அதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப் படும். நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் போன்றவை குறித்த விழிப்புணர்வு, குழந்தைகள் நல இல்லங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் போன்றவை குறித்தும் ஆய்வு மேற்கொள் ளப்படும்.

திருச்சியைப் போன்று, தமிழகத்தில் அரசின் அனுமதி பெற்று மாநிலம் முழு வதும் உள்ள 1,284 குழந்தைகள் நல இல் லங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதுபோல, குழந்தைகள் தங்களுக்கு ஏற் படும் பாலியல்ரீதியான தொல்லைகள் குறித்து புகார்களைத் தெரிவிக்கும் வகை யில், அவர்கள் தொடர்பு கொள்ள வேண் டிய எண் 1098 என்பதை குறிப்பிடும் வகை யில், அனைத்து குழந்தைகள் நல இல்லங் களிலும் விளம்பரப் பதாகைகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு களைத் தருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதுடன், அது போன்ற செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடு பட்டு வரும் இல்லங்கள் மீதும் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆனந்த்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், முசாபூரில் குழந்தைகள் இல்லத்திலும், டிபோரியா குழந்தைகள் இல்லத்திலும் அண்மையில் நிகழ்ந்த வெவ்வேறு சம்பவங்களைத் தொடர்ந்து, அங்கு தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து முசாபூரில் 44 குழந்தைகளும், டிபோரியாவில் 29 குழந்தைகளும் மீட்கப் பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner