எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.1- தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட் டங்களில் உள்ள 14 சுங்கச் சாவடிகளுக்கு (டோல்கேட்) உயர்த்தப்பட்ட கட்டணம் சனிக்கிழமை (செப்.1) முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சாலையில் உள்ள 14 சுங்கச் சாவடிகளின் கட்டணம் 10 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

திண்டிவனம்--உளுந்தூர் பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர் பேட்டை - பாடாலூர் சாலை யில் உள்ள திருமாந்துறை, சென்னை---தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம்--உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம்-குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னமராவதி, தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை உள்ளிட்ட 14 சுங்கச் சாவடி களில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

விக்கிரவாண்டி சுங்கச் சாவடியில் கார்களுக்கு ரூ.80, நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.75 வசூலிக்கப்படும். இதன் மூலம் இந்த சாலையில் ஒரு கி.மீ.க்கு ரூ.1.09 வசூலிக்கப்படு கிறது. பொன்னம்பலப்பட்டி சுங்கச் சாவடியில் கி.மீ.க்கு ரூ.2.02 அளவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே போல் மற்ற 12 சுங்கச் சாவடி களில் கட்டணம் உயர்த்தப்பட் டுள்ளது.

இக்கட்டண உயர்வுக்கு வாகன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் சுங்கச் சாவடிகளில் பெருமள வில் கட்டணம் வசூலாகிறது. ஆனால் சாலைகள் பராமரிப்பு மோசமாக உள்ளது என அவர் கள் குற்றம் சாட்டினர்.


ஜன. 4இல் வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியீடு

சென்னை, செப். 1- 2019 ஜனவரி 4ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பட்டியல் சுருக் கத் திருத்தப் பணிகள் தொடர் பாக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழக அர சியல் கட்சிகளான காங்கிரசு, சிபிஎம், சிபிஅய், பாஜக, அதி முக, திமுக, தேமுதிக உள் ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயல கத்தில் வெள்ளியன்று (ஆக. 31) நடைபெற்றது. இக்கூட்டத் தில் வரைவு வாக்காளர் பட்டி யல் வெளியீடு, வாக்காளர் பட் டியலில் பெயர் சேர்த்தல், திருத் தம் மற்றும் நீக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத் தப்பட்டது. மேலும் வாக்காளர் பட்டியல் குளறுபடி, பூத் முக வர்கள் நியமனம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து கட்சி பிரதிநிதிகளிடம் தலைமை தேர்தல் அதிகாரி கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனைக் கூட் டத்திற்கு பிறகு பேசிய தலைமை தேர்தல் அதிகாரி, வரும் ஜன. 1ஆம் தேதியுடன் 18 வயது நிறைவடைவோர் தங்களது பெயர்களை சேர்க்க வசதியாக வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகள் செப். 1ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் சனிக்கிழமையன்று (செப். 1) வெளியிடப்படும் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார். சிறப்பு வாக்காளர் முகாம் செப்டம்பர் 9 மற்றும் 23, அக்டோபர் 7, 14-ஆம் தேதி களில் நடைபெறும். பெயர்க ளைச் சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் சுமார் ஒரு மாத காலம் அவகாசம் அளிக் கப்படும். இந்த ஆண்டு இது வரை 5.72 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த ஆண்டை காட்டிலும் 4 லட்சம் வாக்காளர்கள் குறை வாக உள்ளனர்.

வாக்குச்சாவடி எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதாகவும், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு முகவர் களை நியமனம் செய்யும்படி யும் அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner