எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மங்கனூர், செப்.1 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்யத்தின் பெரியார் புரா திட்டத்தின் கீழ் பெரியார் மருத்துவக் குழுமம் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, திருச்சி ஹர்சமித்ரா புற்றுநோய் மருத்துவமனை, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நாட்டு நலப்பணித்திட்டம் இணைந்து பெரியார் புரா கிராமம் மங்கனூர் கிராமசேவை மய்யத்தில் 26.08.2018 ஞாயிறு காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை இலவச பொது மருத்துவம் மற்றும் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

வல்லம் பெரியார் மணியம்மை மருத்துவமனை மருத்துவக் குழுவுடன் மருத்துவ முகாமிற்கு 40 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மாண வர்கள், மாணவிகள் மருத்துவ சேவை வழங்கினார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற எட்டாவது பெரிய மருத்துவ முகாம் ஆகும். இந்த மருத்துவ முகாம் அனைத்து பெரியார் புரா கிராமங்களிலும் தொடர்ந்து நடைபெறும்.

இந்த மருத்துவ முகாமில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் மற்றும இளைஞர்கள் என 375 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதில் மார்பக புற்றுநோய் கண்டறியும் மருத்துவ சோதனையின் 50 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். இந்த மருத்தவ குழுவில் பெரியார் மருத் துவ குழுமத்தின் இயக்குநர் மருத்துவர் ஆர்.கவுதமன், மருத்துவர் எஸ்.பிறைநுதல் செல்வி  (பொருளாளர் திராவிட கழகம்) மருத்துவர் பி.மஞ்சுளாவாணி (பெரியார் மருத்துவமனை திருச்சி), மருத்துவர் வி.பஞ்சாட்சரம் (பெரியார் மருத்துவமனை சோழங்கநல்லூர்), மருத்துவர் எம்.ரபியா (ஹர்சமித்ரா புற்றுநோய் மருத்துவமனை திருச்சி), முனைவர் ஆர்.செந்தாமரை (முதல்வர் பெரியார் மருந்தியல் கல்லூரி) மாணவ, மாணவிகள், பணியாளர்கள் மற்றும் ஹர்சமித்ரா புற்றுநோய் மருத்துவ மனை பணியாளர்கள், மாணவிகள், செவிலயர்கள் ஆகியோர் கலந்துகொண்ட சிறப்பான மருத்துவ சேவை வழங்கி னார்கள்.

பெரியார் புரா ஊரக வளர்ச்சி மய்ய இயக்குநர் பேராசிரியர் முனைவர் த.ஜானகி இந்த மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற பெரும் பங்காற்றிய பெரியார் மருத்துவக்குழுமத்தின் இயக்குநர் மருத் துவர் ஆர்.கவுதமன், திருச்சி பெரியார் மருத்துவமனை மருத்துவர்கள், பணி யாளர்கள் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பணியாளர்கள், திருச்சி ஹர்சமித்ரா புற்றுநோய் மருத்துவமனை, மருத்துவர், பணி யாளர்கள், மாணவிகள், பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் நாட்டு நலப்பணித்திட்டம் இந்த மருத்துவ முகாம் மிகவும் சீறும் சிறப்பாக நடைபெற பெரும் பங்காற்றிய மங்கனூர் பேராசிரியர் ஆர்.சத்யராஜ் மேலும் அவரோடு இணைந்து பணி யாற்றிய இளைஞர்கள் மற்றும் பெரியார் புரா திட்ட ஒருங்கிணைப்பாளர் க.முருகேசன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner