எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 2- தமிழகத்துக்கு 12 டிஎம்சி நீர் தர ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளதால்,  வரும் 15ஆம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண் ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழ வரம் ஆகிய நான்கு ஏரிகள் உள்ளன.

இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 டிஎம்சி. இதை தவிர்த்து ஒப்பந்தப்படி தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நீரும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு 12 டிஎம்சி வீதம் ஒப்பந்தப் படி கிருஷ்ணா நீர் வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் வழங்க வேண்டும். இந்நிலையில், தற்போது சென்னை மாநகரில் உள்ள 4 ஏரிகள் வறண்டு வரும் சூழ்நிலையில், கிருஷ்ணா நீர் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.z

இதற்கிடையே, கடந்த ஜூலை ஒன்றாம் தேதி முதல் தவணை காலம் தொடங்கியது. இந்த காலத்தில் 8 டிஎம்சி தர வேண்டும். ஆனால், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்ட லேறு அணையில் 3 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதனால், அங்கிருந்து தண் ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், தென்மேற்கு பருவமழை தாக் கம் காரணமாக சிறீசைலம் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 215 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் 209 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அங்கிருந்து 78 டிஎம்சி கொள் ளளவு கொண்ட சோமசீலா அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும். அந்த அணையில் இருந்து கண்டலேறு அணைக்கு நீர் திறந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் கிடைக்கும். எனவே, ஒப்பந்தப்படி தண்ணீர் பெற சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன் தலைமையில் பொறியாளர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவி னர் ஆந்திர மாநில நீர்வளத்துறை தலைமை பொறியாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், ஒப்பந்தப்படி 12 டிஎம்சி நீர் தர ஆந்திர நீர்வளத்துறை ஒப்பதல் அளித்துள்ளதாக கூறப்படுகி றது. தற்போது, சிறீசைலம் அணையில் இருந்து சோம சீலா அணைக்கு 12,781 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது 78 டிஎம்சி நீர் கொள்ளளவு கொண்ட சோம சீலா அணையில் தற்போது 20 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இந்த அணையில் 23 டிஎம்சிக்கு மேல் நீர் இருந்தால்தான் கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டும். ஓரிரு நாளில் 23 டிஎம்சியை எட்டும் என்ப தால், கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது. கண்டலேறு அணையில் 8 டிஎம்சி தண்ணீர் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும். இதைத்தொடர்ந்து வரும் 15ஆம் தேதிக்குள் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner