எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வல்லம், செப்.2 பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தில் நிகர்நிலைப்பல்கலைக் கழகம்) அறிவியல் கண்காட்சி 30.08.2018 அன்று புதுவை அருணா ஆய்வகத்தின் தலைமை செயல் அலுவலர் வீ.அழக ரசன் அவர்களால் துவக்கி வைத்து உரை யாற்றுகையில்:

இவ்விழாவின் நிறைவில் உங்களுக்கு அன்பரசன் நினைவாக விருது கொடுக்க வுள்ளது.  அன்பரசன் ஒரு இளம் விஞ்ஞானி அவர் சிறு வயதிலேயே பல நாடுகளுக்கு சென்று பல தொழில்நுட்பங் களை ஆராய்ந்த திறமையாளர் அவர் ஒரு விஞ்ஞானியாக வர வேண்டும் என்று தன்னம்பிக்கை கொண்டவர். அப்படிபட்ட அன்பரசன் எனது உடன் பிறந்த சகோதரரின் நினைவாக இவ்வறிவியல் கண்காட்சி வருடந்தோறும் நடை பெற்று வருகிறது.

மேலும் மாணவர்கள் இரண்டு முக்கியமான குறிக்கோளிலில் ஒன்று தாங்கள் என்னவாக வரவேண்டும் என்பதை மாணவர் பருவத்திலேயே முடிவு செய்யவேண்டும். இரண்டாவது தனது குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு நோக்கங்களை வழி வகுத்துக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். அப்படி இருந்தால் தான் நமது குறிக்கோளை நாம் அடைய முடியும் என்றார்.

குப்பையிலிருந்து மின்சாரம்

பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மின்னணு மற்றும் மின்னியியல் துறை தலைவர் பேரா.வயலட் ஜுலி அவர்கள் கண்காட்சியின் சிறப்பு அம்சங் களை பற்றி உரையாற்றும் போது:-

தூய்மை இந்தியா, பசுமை இந்தியா, டிஜிட்டல் இந்தியா திட்டத்தை விளக்கும் வகையில் மாணவர்கள்  குப்பைலிருந்து மின்சாரம் உறிஞ்சி குழி கழிப்ப, தரையை சுத்தப்படுத்துதல், க்ரிப்பர் ரோபர், சுத்தப் படுத்தும் ரோபர், பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் உணவு பொருட்களில் கலப்படம் உள்ளிட்ட அறிவியல் தொழில் நுட்பங்களை மாணவர்களுக்கு காட்சி படுத்தி செயல்விளக்கம் அளித்தனர்.

இதில் பள்ளிகளிலிருந்து 40 செயல் விளங்கங்கள், பாலிடெக்கினிக்லிருந்து 10 செயல் விளக்கங்களும் , பெரியார் மணி யம்மை பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கபட்ட மாதிரிகள்  213 மற்றும் பள்ளி மாணவர்களுக்கு திட்ட விளக்க படம், சிறந்த புகைப்படம் , வினாடி வினா, ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் குறும்படம் போன்ற போட்டிகளில் 13 தலைப்புகளில் 800 மாணவர்கள் பங்குபெற்றனர். இவ் வறிவியல் கண்காட்சியில் 65 பள்ளிகளி லிருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர்.

மகளிருக்கு முக்கியத்துவம்

பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் உரையாற்றும் போது:-

தந்தை பெரியார் அவர்களின் பெயரால் இயங்கும் கல்லூரி மகளிருக்கு முக்கியத்துவம் கொடுக்ககூடிய கல்வி நிலையமாகும். திறமைமிக்க ஆசிரியர் களை கொண்டு சிறப்பான கல்வியை சிறந்த முறையில் மாணவர்களுக்கு அளிக்கின்றனர். இங்கு நாங்கள் மாண வர்களுக்கு படிப்பு அறிவு மட்டுமல்லாமல் சிந்தனை திற செயல் வடிவில் உரு வாக்குவதற்கும் நாங்கள் உறுதுணையாக இருக்கின்றோம் என்றார்.

பல்கலைக்கழக பதிவாளர் அவர்கள் உரையாற்றும் போது:-

ஒரு பள்ளியின் மாணவர்கள் என் னிடம் ஒரு சோதனையை மிக எளிதாக செய்து காண்பித்தார்கள். அந்த சோதனை யில் அவர்களுடைய தன்னம்பிக்கை இருந்தது தெளிவாக தெரிந்தது. அது வர வேற்கதக்கது  என்று கூறினார். அவர் களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பெரியார் தொழில்நுட்ப வணிக காப்ப கத்தின் முதன்மை செயல் அலுவலர் அவர்கள் உரையாற்றும் போது:-

எங்களது வணிக காப்பகம் மாண வர்கள் கண்டுபிடித்த புதிய தொழில் நுட்பங்களை வணிகப்படுத்துவதற்கும் காப்புரிமை பெறுவதற்கும் உறுதுணை யாக இருந்து உதவுகின்றோம் என்று குறிப்பிட்டார்.

தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பேரா.எம்.கே.சி.சுபாசினி உரையாற்றும் போது:-

வாய்ப்புகள் வரும்போது அவற்றை நழுவ விடாமல் நன்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்றும், தான் எப்படியும் சாதிக்கவேண்டும் என்ற குறிக் கோளோடு மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று கேட்டு கொண்டார். என்றும் தன்னம்பிக்கை விட்டுவிடாகூடாது என்று கூறினார்.

பல்கலைக்கழக கல்வி புல முதன் மையர் பேரா.பி.கே.சிறீவித்யா  கண் காட்சியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுகளை வழங் கினார்.

வித்யாவிகாஷ் மேல்நிலைப்பள்ளி கந்தர்வக்கோட்டை ஒட்டு மொத்த பரிசினை வென்றது. 26 போட்டிகளில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு 100 க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.

இறுதியில் கட்டடதுறை இறுதியாண்டு மாணவர் மணிகண்டன் நன்றியுரை ஆற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner