எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்பூர், செப். 3 -தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் 3ஆவது மாநில மாநாடு, திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மாபெரும் எழுச்சிப் பேரணி யுடன் ஞாயிறன்று துவங்கியது.

மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் 3ஆவது மாநில மாநாடு திருப்பூரில் ஞாயிறன்று தொடங்கி செப்டம்பர் 4ஆம் தேதி வரை நடைபெறு கிறது. மாநாட்டின் தொடக்க நிகழ்வாக ஞாயிறன்று மாலை யுனிவர்சல் திரையரங்கம் முன் பிருந்து மாற்றுத் திறனாளிகள் பேரணி தொடங்கியது. பேர ணியில் ஊனமுற்றோர் தேசிய மேடையின் பொதுச் செயலா ளர் வி.முரளிதரன், மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி, மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன், துணைத் தலைவர் டி.லட்சுமணன் உள் ளிட்டோர் அணிவகுத்து வந் தனர்.

பேரணி திருப்பூர் யுனி வர்சல் சாலையில் இருந்து குமரன் சாலைவழியாக நகர் மண்டப மைதானத்தைச் சென் றடைந்தது. முன்னதாக வழி நெடுக மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை முன்வைத்தும், அவற்றை நிறைவேற்றிட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நகர் மண்டப அரங்கில் மாநாட்டுப் பேரணி நுழைந் ததும், பொதுமாநாட்டு நிகழ்ச் சிகள் தொடங்கின.மாற்றுத் திறனாளி கலைக்குழு வினரின் கலை நிகழ்ச்சி முதலில் நடை பெற்றது. டவுன்ஹால் மைதா னம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

பொது மாநாடு

இதைத் தொடர்ந்து நடை பெற்ற பொது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மத்தியக் குழு உறுப் பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., ஊனமுற்றோர் தேசிய மேடை பொதுச் செயலாளர் வி.முரளிதரன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

மாநாட்டு நிகழ்வுக்கு மாநிலத் தலைவர் பா.ஜான்சி ராணி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் வர வேற்றார். திங்களன்று பிரதிநிதிகள் மாநாடு தொடங்கி செவ் வாயன்று நிறைவடைகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner