எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.4  இந்தியா இயற்கை வேளாண்மை கண்காட்சி 2018, நிகழ் வானது, 2018, செப்டம்பர் 7ஆம் தேதியி லிருந்து 11ஆ-ம் தேதி வரை நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடைபெறும்.

மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு அமைச்சகத்தினால் வழங்கப்பட்டுள்ள கருத்தாக்க ஆதரவோடு, இக்கண்காட்சி யானது, எய்ம் ஃபார் சேவா என்ற அமைப்பின் ஒரு செயல்பாடான ஸ்பிரிட் ஆஃப் தி எர்த் என்பதன் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா இயற்கை வேளாண்மை கண்காட்சியில், நாடெங்கிலுமிருந்து விவ சாயிகள் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் தொழில்முனைவோர்கள் பங்கேற் கின்றனர்.

கல்வி மற்றும் விழிப்புணர்வின் வழி யாக இயற்கை (கரிம) வேளாண்மையை முன்னிலைப்படுத்தும் கூர்நோக்கத் தோடு நடைபெறுகிற இந்த 5 நாட்கள் கண்காட்சி நிகழ் வானது, இயற்கை வேளாண்மையில் ஆர்வமும், ஈடுபாடுமுள்ள அக்கறை பங்காளர்கள், சில்லரை விற்பனையா ளர்கள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியா ளர்கள், ஆலோசகர்கள் மற்றும் இத்துறை யைச் சேர்ந்த சங்கங்கள் என பல பிரிவினரையும், ஒன்றாக ஒருங்கிணைக்கும்.

சென்னையில், இவ்வகையினத்தில் முதல்முறையாக நடத்தப்படுகிற இக்கண் காட்சியில் நாட்டின் 14 மாநிலங்களைச் சேர்ந்த 60-க்கும் கூடுதலான விநியோகஸ் தர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொள்வதால், தேசிய அளவிலான பங் கேற்பை இதில் காண முடிந்தது. தானியங் களிலிருந்து ஆடைகள் வரை உற்பத்திப் பொருட்கள் மற்றும் தயாரிப்புப்பொருட் களின் அணிவரிசை இதில் காட்சிப் படுத்த வுள்ளது. அரிசி, தேன், சர்க்கரை, மசாலா மற்றும் நறுமணப்பொருட்கள், சுவை யூட்டிகள் இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்டவை இடம் பெறுகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner