எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.4 குரூப் 2 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 9 -ஆம் தேதி கடைசியாகும்.  சமூக பாதுகாப்புத் துறை, உதவி தொழிலாளர் நலத் துறை அதிகாரி, சார் -பதிவாளர் உள்ளிட்ட குரூப் 2 தொகுதியில் 1,199 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியி டங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மாதம் 10ஆம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 9ஆம் தேதி கடைசி நாளாகும். இதன்பின், இந்தியன் வங்கி அல்லது  ஸ்டேட் வங்கி மூலமாக விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த வரும் 11 ஆம் தேதி கடைசியாகும். குரூப் 2 -க்கான முதல்நிலை எழுத்துத் தேர்வு நவம்பர் 11 -ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner