எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கிருஷ்ணன் கோயிலில் 35 லட்சம் மதிப்பு நகை, பணம் கொள்ளை

தானே, செப்.4  மகாராஷ்டிரா மாநிலம் தானேயின் மார்க்கெட் பகுதியில் கிருஷ்ணன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த கோயிலுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத ஆசாமிகள் பகவான் கிருஷ்ணனுக்கு  அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். நேற்று காலை கோயில் நிர்வாகிகள் சிலர் கோயிலுக்கு வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, கிருஷ்ணனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளும் மாணாமல் போயிருந்தது. உண்டியலும் உடைக்கப்பட்டு பணம்  கொள்ளை யடிக்கப்பட்டிருந்தது. கிருஷ்ணனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகளின் மதிப்பு ரூ.2 முதல் ரூ.3 லட்சம் இருக்கும் என்றும் உண்டியலில் கொள்ளைப் போன பணம் ரூ.32 லட்சம் இருக்கும் என கோயில் நிர்வாகிகள்  தெரிவித்துள்ளனர்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 2 கோயில்களில் சிலைகள் கடத்தல்

குமரி, செப்.4 கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 2 கோயில்களில் சிலைகள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பன்னிரு சிவாலயங்களில் ஒன்றான மார்த்தாண்டத்தை அடுத் துள்ள திக்குறிச்சி மகாதேவர் கோயி லில், கடந்த 31-ஆம் தேதி இரவு சிவன், முருகன், விநாயகர் சிலைகள் மற்றும் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன. இது குறித்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இரவு அதே பகுதியில் மேலும் 2 கோயில்களில் சிலைகள் மற்றும் நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டன.

திக்குறிச்சியில் ஜோதிடர் சந்திர சேகர உண்ணிக்கு சொந்த மான அம்மன் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது புதிதாக 1.5 அடி உயர பித்தளையால் ஆன பராசக்தி அம்மன் சிலை வைக்கப்பட்டது. நேற்று முன் தினம் அந்த அம்மன் சிலையையும், அதன் கீழ் புதைக்கப்பட்டி ருந்த நவரத்தினங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட் களையும் சில நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இதேபோன்று, கருங்கல் அருகே மன்னர் காலத்தில் கட்டப் பட்ட பழமையான சங்கர நாராயணர் குளத்து மகாதேவர் கோயில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் இருந்த சிவன் சிலை, வெள்ளி கவசம், 4 கிராம் எடை யுள்ள 3 தங்க பொட்டுகள், 2 பவுன் தங்க ருத்ராட்ச மாலை, உண்டியல் பணம் ஆகியவையும்  கொள்ளையடிக்கப் பட்டன. இந்த 2 சம்பவங்கள் குறித்து மார்த்தாண்டம் மற்றும் கருங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திக்குறிச்சி கோயிலில் கொள்ளை நடந்த மறுநாளே மேலும் 2 கோயில்களில் சிலைகள் கடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner