எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 5- போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க நெடுஞ்சாலைகளில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என மாநில போக்குவரத்துத் துறை அமைச் சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறி னார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்யவும், விதிமீறலைத் தடுக்கவும் ஏதுவாக, செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான 280 கி.மீ. தூரத்துக்கு தேசிய நெடுஞ்சாலையை முதல்முறையாக நவீன தானியங்கி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக் கும் திட்டம் விரைவில் செயல் படுத்தப்படும்.

இதன்மூலம் அதிவேக பய ணம், சாலை விதிகளை மீறு தல் உள்ளிட்ட பல குறைபாடு கள் களையப்பட்டு, விபத்தில் லாத, பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும். சாலை விதிகளை மீறுவோருக்கு உட னடி அபராதம் விதிக்கப்படும்.

முன்னோட்ட அடிப்படை யில் செயல்படுத்தப்படும் இத் திட்டம் படிப்படியாக அனைத்து சாலைகளிலும் விரிவாக்கம் செய்யப்படும். மாநிலம் முழுவதும் உள்ள சாலைகளில் பயணப் பாதுகாப்பை மேம் படுத்தும் வகையில் ரூ. 60 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பல் வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விரைவில் பேட்டரி பேருந் துகள் இயக்கம்: சென்னையில் இயக்கப்பட்டு வந்த குளிர்சா தன வசதியுடைய பேருந்துக ளின் ஆயுள்காலம் கடந்ததுடன், குறிப்பிட்ட கிலோ மீட்டரைக் கடந்தும் இயக்கப்பட்டு வந்த தால், அவற்றின் பராமரிப்பு செலவு, வருவாயைக் காட்டி லும் அதிகமாக இருந்தது. அதனால் அப்பேருந்துகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், மின்பேட் டரி பேருந்துகளை இயக்குவதற் கான நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு வருகிறது. முதல்கட் டமாக 80 பேட்டரி பேருந்துகள் விரைவில் சென்னையில் பயன் பாட்டுக்கு வரவுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner