எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகை, செப். 7- காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்க ளில் சுமார் 10 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பணிகள் நடந் துள்ளன. நேரடி விதைப்பு மற் றும் நடவு செய்து 30 நாட்களே ஆன பயிர்களே பெருமளவில் உள்ளன. சமீபத்தில் கேரளா, கரு நாடகாவில் பெய்த மழை கார ணமாக மேட்டூர் அணைக்கு வந்த உபரி நீர் முழுவதும் திறந்து விடப்பட்டது.

இதனால் அனைத்து ஆறுகளிலும் அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்தாண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருந்தனர். ஆனால் திருச்சி முக்கொம்பில் கொள்ளிடம் அணை உடைந்ததால், காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுவிட்டது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பது பெருமள வில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் பெயருக்கு மட்டுமே சிறிதளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. கிளை வாய்க்கால்களுக்கு தண்ணீர் பாயவில்லை. இதனால் பல ஆறுகள், கிளை வாய்க்கால்கள் வறண்ட நிலையிலேயே காணப் படுகின்றன. இதன் காரணமாக சம்பா பயிர்கள் கருகத் தொடங்கி விட்டன. சில இடங்களில் விளை நிலங்கள் பாளம் பாள மாக வெடித்து காணப்படுகின் றன. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சம் ஏக்கரில் நேரடி விதைத்த விதைகள் முளைக்காமலேயே போய் விட்டன.

இவ்வாறு தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 2.50 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 50,000 ஏக்கரிலும் பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளன. இதே நிலை நீடித்தால், இன்னும் ஒரு வாரத்தில் எல்லா பயிர்களுக்கும் இதே நிலை ஏற்படும் என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே முக்கொம்பு அணை சீரமைப்பு பணியை விரைந்து முடித்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவ சாயிகள் போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர். கருகும் பயிர்களுக்கு தண்ணீர் கேட்டு நாகை தாலுகா பாலையூரில் நேற்று விவசாயிகள் போராட் டம் நடத்தினர். தண்ணீரின்றி பாளம் பாளமாக வெடித்துள்ள நிலத்தில் கருப்புக்கொடிகளை நட்டும், கைகளில் கருப்புக் கொடி ஏந்தியும் முழக்கம் எழுப் பினர். கூட்டுறவு கடன் கிடைக் காத நிலையில் ஆற்றுப்பாச னத்தை நம்பியுள்ள விவசாயி கள் தனியாரிடம் கடன் பெற்று சாகுபடி செய்திருந்தனர். ஏற் கெனவே பெரும் பொருளாதார பின்னடைவில் இருந்த இந்த விவசாயிகளுக்கு இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner