எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, செப். 7- விடுதலை சிறுத் தைகளின் பொதுச்செயலாள ரும், எழுத்தாளருமான ரவிக் குமாரை படுகொலை செய்ய திட்டம் தீட்டியுள்ள இந்துத் துவா பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புதுவையில் ஆர்ப்பாட் டம் நடந்தது. சுதேசி மில் அருகே நடந்த இந்த ஆர்ப் பாட்டத்துக்கு விடுதலை சிறுத் தைகள் கட்சி முதன்மை செய லாளர் தேவ.பொழிலன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் புதுவை காங்கிரசு தலைவரும், அமைச் சருமான நமச்சிவாயம் கலந்து கொண்டு கண்டன உரையாற் றினார். அப்போது அவர் பேசி யதாவது:

நாட்டை ஆளும் பாரதீய ஜனதா கட்சி அடக்குமுறையை கையாண்டு வருகிறது. தங்க ளுக்கு எதிராக யாரும் கருத்து சொல்லக்கூடாது என்று நினைக் கிறது. இதற்காக எழுத்தாளர் கள், முற்போக்கு சிந்தனைவாதி களை மிரட்டி வருகிறது.

அவர்களை எதிர்த்து கருத்து சொல்லக்கூடாது என்றால் இது என்ன சர்வாதிகார நாடா? இந் திய ஒரு ஜனநாயக நாடு. சமீ பத்தில் கூட சோபியா என்ற மாணவி பாரதீய ஜனதா அர சுக்கு எதிராக முழக்கமிமிட்டார் என்பதற்காக அவரை கைது செய்தார்கள்.

எழுத்தாளர் ரவிக்குமாருக்கு புதுவை அரசு உரிய பாதுகாப்பு வழங்கி உள்ளது. அவருக்கு பின்னால் நிறைய பேர் உள் ளனர். மதவாதிகளுக்கு எதிராக மதச்சார்பற்றவர்கள் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு அமைச்சர் நமச்சி வாயம் பேசினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner