எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.8 ஒவ்வொரு வரும் இவ்வுலகை காண உத வுவது கண். சில காரணங்களால் லட்சக்கணக்கானோர் பார்வை இன்றி தவிக்கின்றனர். ஆனால் விழிக்கொடை செய்வதன் மூலம் அவர்களும் பார்வை பெற முடியும்.  நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை. இதனை கொடை அளிப்பதன் மூலம் பார்வை யற்றவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றலாம்.

இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., 8ஆம் தேதி தேசிய விழிக்கொடை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இறப்போரில் விழிக்கொடை செய்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. இதற்கு முக்கிய காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாமை.

கண்ணின் முக்கிய உறுப்பான கார்னியா (விழி வெண் படலம்) பாதிக்கப்பட்டால், ஒளிக் கதிர்கள் உள்ளே செல்வது தடுக்கப் படுகிறது. விழித்திரையில் பிம்பம் படியாததால், பார்வை தெரிவதில்லை. தொற்று நோய் கிருமிகள், விபத்து, ஊட்டச்சத்து குறைவு, கண் சிகிச்சை குறைபாட்டால் சிலருக்கு பிறவியிலேயோ, பரம்பரை யாகவோ கார்னியா பாதிக்கப்படுகிறது.

கார்னியாவை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டு, கொடையாகக் கிடைக்கும் கண்ணின் கார்னியா பகுதியை வைத்து மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

அனைவரும் விழிக்கொடை செய்யலாம். நீரிழிவு நோய், ஆஸ்துமா, டி.பி., ரத்தக்கொதிப்பு போன்ற நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் விழிக்கொடை செய்யலாம். தொற்று நோய் கிருமியின் காரணமாக இறப்பு, மஞ்சள் காமாலை, கல்லீரல் அழற்சி, வெறி நாய்க்கடி, எய்ட்ஸ் போன்றவை இருந்தால் மட்டுமே விழிக்கொடை செய்ய முடியாது.  விழிக்கொடை செய்ய விரும்புவோர் விழிக்கொடை வங்கி, அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளை தொடர்பு கொள்ளலாம்.

உலகில் மொத்தம் உள்ள பார்வையற்றவர்களில் பாதிபேர் நம்நாட்டில் உள்ளனர். இங்கு 1.50 கோடி பார்வையற்றவர்கள் உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் 'கார்னியா' குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2020இல் 1.06 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. பார்வை இழப்பில் 75 சதவீதம் தடுக்கக் கூடியது.

நம்நாட்டில் 2017இல் 1,285 கார்னியா மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. விழிக்கொடை மூலம் 2017ல் 1,844 கார்னியா பெறப்பட்டுள்ளது. இதுவே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சம். கடந்த 52 ஆண்டுகளில் 26 ஆயிரம் கார்னியாக்கள் கொடையாக பெறப் பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner