எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருச்சி, செப். 8-  திருச்சி முக்கொம்பு மேலணையில் நடை பெற்று வரும் பணிகளை பார் வையிட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அளித்தப் பேட்டி வருமாறு:

காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் முக்கொம்பு மேலணைப் பகுதியில் கொள் ளிடம் ஆற்றில் 9 மதகுகள் இடிந்து விழுந்தன. இதைத் தொடர்ந்து கடந்த 15 நாள்களாக நடைபெற்ற தற்காலிக தடுப் புப் பணிகள் வெள்ளிக்கிழமை (செப்.7) நிறைவு பெற்றுள்ளது.

இதுகுறித்த விவரம் முதல் வர், துணை முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற் காலிகத் தடுப்புப் பணி முடிந்த போதிலும், மணல் மூட்டை, பாறாங்கற்கள் கொண்டு உரு வாக்கப்பட்ட தடுப்புப் பகு தியை பலப்படுத்த வேண்டியிருப்பதால், தொடர்ந்து அப் பகுதிகளில் பணிகள் மேற் கொள்ளப்படும். 9 மதகுகள் உடைந்த நிலையில், மற்ற மதகுகளின் தாங்கும் தன்மை குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருக் கின்றனர்.

கொள்ளிடம் ஆற்றுப் பாலத் திலிருந்து 100 மீட்டர் தொலை வில் ரூ.410 கோடியில் கதவணை கட்டுவதற்கான தொடக்க நிலைப் பணிகள் தற்போது நடைபெறுகின்றன. அதே போல, பழைய பாலத்தைப் பலப்படுத்தும் வகையில், சீட் பில்லர் முறையில்அங்கு பணி கள் நடைபெறும்.

தற்காலிகத் தடுப்புப் பணி கள் முடிந்தாலும், பொதுப் பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவர். அதுபோல, ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டு, அவர் களும் பல்வேறு விதமான பணி களுக்கு பயன்படுத்தப்படுவர்.

தற்போது மாயனூரிலிருந்து வரும் 6,000 கன அடி தண்ணீ ரில், 4,000 கன அடி காவிரியி லும், 1,000 கன அடி தண்ணீர் கொள்ளிடத்தில் செல்கிறது. டெல்டா விவசாயிகள் பாசனப் பணியைத் தொடர்ந்து மேற் கொள்ளும் வகையில் காவிரியில் தண்ணீர் திறப்பது குறித்த அறிவிப்பை முதல்வர் விரை வில் வெளியிடுவார் என்றார்..

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner