எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.9  அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலசங்கங் களின் கூட்டமைப்பின் சார்பில் வருகிற செவ்வாய்கிழமை 11.9.2018 அன்று பகல் 11.30 மணி அளவில் பிற்படுத்தப்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பெரம்பூரில் உள்ள அய்.சி.எப். நிறுவன பொது மேலாளர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து இக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக மத்திய அரசை வலியுறுத்தும் எமது கோரிக்கைகளாவன:

1. மத்திய பணியாளர் துறை யின் 6.10.2017 தேதியிட்ட ஆணை, பொதுத்துறை நிறுவனம், வங்கி, காப்பீட்டுக்கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் பிற்படுத்தப்பட்டோர் அனைவரையும் கிரிமிலேயர் என்று பாகுபாடு செய்து, 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டினை பெற தகுதியற்றவர்கள் என அறிவித்துள்ளது. சமூக அநீதியான இந்த ஆணையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

2. பிற்படுத்தப்பட்டோரை மட்டும் கிரிமிலேயர் எனும் பொருளாதாரக் கோட்பாட்டில் பிரித்திடும் முறையை முற்றி லுமாக நீக்கிடவும், இதற்குரிய அரசியல் சட்ட திருத்தத்தை மத்திய அரசு மேற்கொள்ளவும் வேண்டும்.

3. மத்திய அரசில் பிற் படுத்தப்பட்டோருக்கென தனியாக ஒரு துறையை உருவாக்க வேண்டும்.

4. பதவி உயர்வில் பிற் படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்ட மைப்பின் செயல் தலைவர் ஜே.பார்த்தசாரதி தலைமை வகித்திட, பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் மத்திய அரசு, பொதுத்துறை நிறுவன பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள்.