எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருப்புவனம், செப்.9 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை புதூரில் அக ழாய்வில் எடுக்கப்பட்ட பொருட் கள் குறித்த அறிக்கை விரைவில் மத்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் அகழாய்வு பணிகளை மத்திய தொல்லியல் துறை மேற்கொண்டுள்ளது. அந் தந்த மாநில தொல்லியல் துறையும் அகழாய்வு பணிகளை மேற் கொள்வது வழக்கம். அகழாய்வில் கண் டெடுக்கப்பட்ட பொருட் களை ஆய்வு செய்து அதன் தன்மை, காலம், பொருட்களின் உபயோகம் உள்ளிட்ட அனைத் தையும் சென்னை, குஜராத் உள் ளிட்ட குறிப்பிட்ட நகரங்களில் மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு மய்யங்களுக்கு அனுப் பப்படும். பின் பிரபல தொல்லியல் அறிஞர்கள், ஓய்வு பெற்ற தொல் லியல்துறை அதிகாரிகள் ஆலோ சனை பெற்று அந்த பொருட்கள் பற்றிய விபரங்கள் பட்டியலிடப் படும். இது பற்றிய விபரங்கள் அனைத்தும் மத்திய தொல்லியல் துறையின் பிரிவான காபாவிடம் அளிக்கப்படும். அதன்பின் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்படும்.

தமிழக தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கீழடியில் கண்டெ டுக்கப்பட்ட தங்க அணிகலன்கள், களிமண் அச்சுகள், சிற்பங்கள், பானை ஓடுகள், இரும்பு கழிவு பொருட்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அளிக்கப்பட உள்ளது. அதன் பின் மத்திய தொல்லியல் துறை அய்ந்தாம் கட்ட அகழாய் விற்கு அனுமதி வழங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.