எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.9  நீட் தேர்வில் 309 மதிப்பெண் பெற்றும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சேலையூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.  தாம்பரம் அடுத்த சேலையூர், மகாலட்சுமி நகர், புறநானூறு தெருவை சேர்ந்தவர் எட்வர்டு. இவர், தாம்பரம் கோர்ட்டில் வழக்குரைஞராக உள்ளார். இவரது மனைவி சுஜாதா. இவர், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியையாக உள்ளார். இவரது மகள் ஏஞ்சலின் சுருதி (19). செம்மஞ்சேரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், 2 முறை நீட் தேர்வு எழுதியுள்ளார். கடந்த முறை எழுதிய நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தார்.  இந்த ஆண்டும் நீட் தேர்வில் 309 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இருந்தபோதிலும் அவருக்கு டாக்டர் சீட் கிடைக்கவில்லை.

தனியார் மருத்துவ கல்லூயில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் ரூ.12 லட்சம் பணம் கேட்டுள் ளனர். இந்த பணத்தை கட்ட முடி யாததால் பொறியியல் கல்லூரியில் மாணவி சேர்ந்துள் ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் படுக்கைய றையில் முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடிக்கொண்டு, கழுத்தை செல்போன் சார்ஜர் வயரால் இறுக்கிய நிலையில் ஏஞ்சலின் சுருதி இறந்து கிடந்தார். இதை பார்த்த அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர். பின்னர் சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரித்த தில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தனியார் மருத்துவ கல்லூரியில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் ரூ.12 லட்சம் பணம் கட்டச் சொல்லி சீட் கிடைத்ததாகவும் பணம் கட்ட முடியாததால் இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவி சேர்ந்த தாகவும் மருத்துவராக முடியவில் லையே என்ற மனவேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் பெற்றோர் தெரிவித்தனர்.  இதனை தொடர்ந்து மாணவி உடலை பிரேத பரி சோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் உடல் பரிசோதனைக்கு பிறகு உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

மருத்துவராக வேண்டும் என்பதே கனவு

சுருதி பற்றி அவரது உறவி னர்கள் கூறியதாவது: சிறு வயதில் இருந்தே மருத்து வராக வேண்டும் என்ற எண் ணத்தில் இருந்து வந்தாள் சுருதி. இதற்காக நன்றாக படித்து வந்தாள். சிபிஎஸ்இ பள்ளியில் தான் சுருதி பிளஸ்2 படித்தார். கடந்த முறை நீட் தேர்வில் மதிப்பெண் குறைவாக வந்ததால் மனமுடைந்த சுருதி அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் படித்து நீட்டில் தேர்ச்சி பெற வேண்டும் என தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து நன்றாக படித்து இந்த முறை நீட் தேர்வெழுதி 309 மதிப்பெண்கள் பெற்றார். ஆனால், அரசு ஒதுக் கீட்டில் மருத்துவ சீட் கிடைக் காததால் தனியார் மருத்துவ கல்லூரியில் மேனேஜ்மெண்ட் கோட்டாவில் சீட் வாங்க முயற்சி செய்துள்ளனர் பெற்றோர். ஆனால் அங்கு 12 லட்சம் ரூபாய் பணம் கேட்டதால் பணம் புரட்ட முடியவில்லை. இதனால் வேறு வழியில்லாமல் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளார். அதன் பின் மனஉளைச்சலில் காணப் பட்டு வந்த சுருதி நீட் தேர்வில் மதிப்பெண் பெற்றும் மருத்து வராக முடியவில்லையே என்ற வேதனையில் இந்த முடிவை எடுத்துவிட்டார் என தெரிவித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner