எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாவூர்சத்திரம், செப்.9 11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் விலையில்லா மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தெரிவித்தார். திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் ஔவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியது: தமிழகத்தில் கல்வித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளோம்.

அரசு பொதுத் தேர்வுகளில் ரேங்கிங் சிஸ்டம் ஒழிக்கப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் வெளியிட்டது தமிழகத்தில் மட்டும்தான். நிகழாண்டு 9 முதல் 12 -ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கான சீருடை மாற்றப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் சீருடை மாற்றப்பட்டு, தனியார் பள்ளிகளை விஞ்சும் அளவுக்கு அரசே சீருடையை வழங்கும். வரும் ஜனவரி முதல் வாரத்தில் 11, 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும். அதேபோல் அடுத்த மாதம் முதல் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படும்.

அடுத்த ஆண்டு முதல் பிளஸ் 2 முடித்தாலே வேலை என்ற உத்தரவாதம் என்கிற நிலை ஏற்படுத்தப்படும். சி.ஏ. படிப்புக்கு 25 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. 3 ஆயிரம் பள்ளிகளில் 6, 7, 8 -ஆம் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 9, 10, 11 -ஆம் வகுப்புகளுக்கு இன்டர்நெட் வசதியும் செய்து தரப்படவுள்ளது. எந்தப் பள்ளியிலும் ஆசிரியர் பணியிடங்கள் காலி என்ற நிலை இனி இருக்காது. அரசுப் பள்ளியில் மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேச சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner