எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.9 சென்னையில் காவலர்கள் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டம் ஒரு மாதத் தில் செயல்பாட்டுக்கு வருகிறது.

இந்தியாவில் அதிகமாக விபத்துகள் நடைபெறும் பெரு நகரங்களில் முதலிடத்தில் இருக்கும் சென்னையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட 7,466 சாலை விபத்துகளில் 1,341 பேர் இறந்தனர். 6 ஆயிரம் பேர் காயமடைந்தனர். 2016-ஆம் ஆண்டைக் காட்டிலும் 2017-ஆம் ஆண்டு 158 பேர் அதிகமாக உயிரிழந்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் பெருநகரங்களில் நடந்த மொத்த விபத்துகளில் 14.9 சதவீதம் சென்னையில் நடை பெறுவதாக தேசிய குற்ற ஆவ ணக் காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, சாலை விபத் துகளையும், உயிர் இழப்பு களையும் தடுக்கும் வகையில் சென்னை காவல்துறை போக்கு வரத்து விதிமீறல் களில் ஈடுபடு வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும் காவல்துறையினர் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கும்போது பல்வேறு பிரச்சி னைகள் எழுகின்றன. அதே போல காவல்துறையினர் லஞ்சம் வாங்கு வதாக புகார்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு வருகின்றன.

இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் மீது கூறப் படும் புகார்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையிலும், காவல்துறையினரிடம் தகராறு செய்பவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் வகை யிலும் காவலர் சீருடையில் கேமரா பொருத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னை காவல்துறை முடிவு செய்தது. இந்த திட்டத்துக்கான ஒப்பந்தப் புள்ளியை சென்னை காவல்துறை இறுதி செய்துள்ளது. இதையடுத்து இத் திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படும் என சென்னை பெருநகரக் காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.