எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.10 நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து தவறான புள்ளி விவரங்களை பாஜக கூறி வருவதாக முன் னாள் மத்திய அமைச்சரும், காங்கிரசு மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் சனிக் கிழமை பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, "முந்தைய காங்கிரசு அரசுகளைவிட, இப் போதைய பாஜக ஆட்சியில் தான் நாட்டின் பொருளாதாரம் சிறப்பான நிலையை எட்டி யுள்ளது. இதனை மக்களிடம் பாஜகவினர் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும், புள்ளி விவரங்களின் அடிப்படையில் சிதம்பரம் உள்ளிட்ட எதிர்க் கட்சியினரை நாம் நேரடி விவா தத்துக்கு அழைக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் பிடிஅய் செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட் டியில் சிதம்பரம் கூறியதாவது:

கடந்த 1991-ஆம் ஆண்டு நமது நாட்டில் தாராளமயமாக் கல் கொள்கை அறிமுகப்படுத் தப்பட்டது. அதன் பிறகு காங் கிரஸ் தலைமையிலான அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கடந்த 2006-&2007 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.8 சதவீதமாக இருந்தது. அப்போது மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். இதுதான் நமது நாட்டின் மிக உயரிய பொருளாதார வளர்ச்சி குறியீடு.

இதற்கு முன்பு 1988-&1989ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 10.2 சதவீத மாக இருந்தது. இவை இரண்டு மட்டுமே நாட்டின் பொருளா தாரத்தில் குறிப்பிடத்தக்க சாத னைகள் ஆகும். இது மத்திய புள்ளியியல் அமைப்பு அதி காரப்பூர்வமாக அளித்த தகவல்.

ஆனால், நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி குறித்து பாஜக வினர் அளிக்கும் தகவல்கள் அதிகாரப்பூர்வ தகவலுக்கு முரணாக உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில்தான் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத் தியுள்ளோம் என்ற தொனியில் பாஜகவினர் பேசி வருகின் றனர். அவர்கள் எந்த அடிப் படையில் வளர்ச்சி என்று கூறுகிறார்கள் என்பது தெரிய வில்லை. உண்மையில் மத்திய புள்ளியியல் நிறுவனத்தின் அறிக்கைகளை பாஜகவினர் ஏற்கிறார்களா? இல்லையா என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும். ஏனெனில் மத்திய புள்ளியியல் நிறுவனம் தான் நாட்டின் நம்பகத்தன்மை வாய்ந்த பொருளாதார விவரங் களை தந்து வருகிறது என்றார் பி.சிதம்பரம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner