எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நல்லாம்பாளையம், செப். 10- பள்ளிக் கல்வித்துறை சார்பில் உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான எறிப் பந்து போட்டி நல்லாம்பாளை யம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 06.09.2018 அன்று நடைபெற்றது.

போட்டிகள் 14 வயதிற்குட் பட்ட, 17 வயதிற்குட்பட்ட, 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் 14 வயதிற் குட்பட்ட, 17 வயதிற்குட்பட்ட, ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தை பிடித்த னர். போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner