எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து  அண்ணா சாலையில் மறியல்

முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கைது

சென்னை, செப்.11 பெட் ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, சென்னை அண்ணா சாலையில் அனைத்து தொழிற் சங்கம் சார்பில் நேற்று நடந்த சாலை மறியல் போராட்டத்தில் முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்பட 1000க்கும்  மேற்பட் டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென் னையில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அண்ணா சாலை தாராபூர் டவர் அருகே நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி மாநில செயலாளர் முத் தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் திமுக, காங்கிரசு உள்ளிட்ட தோழமை கட்சிகளை சேர்ந்த ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில், பெட் ரோல், டீசல் மீதான 52 சதவீத வரிகளை மத்திய, மாநில அரசு குறைக்க கோரி முழக்கமிட்டனர். இந்த விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் நேரடியாக பாதிக்கப்படுகிறனர். எனவே பெட்ரோல், டீசல் மீதான  வரி விதிப்பை திரும்ப பெற வேண் டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத் தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட முத்தரசன், பாலகிருஷ் ணன் ஆகியோர் அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  மறியலில் ஈடு பட்ட முத்தரசன், பாலகிருஷ் ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்ய முயன்றனர். அப்போது போராட்டக்காரர் களுக்கும் காவல்துறையினருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், போராட்டத்தில்  ஈடுபட்ட தலைவர்கள் அண்ணா சாலை யில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

பின்னர் காவல்துறையினர் முத்தரசன், பாலகிருண்ணன் உட்பட ஆயிரத்திற்கும் மேற் பட்டோரை கைது செய்து, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமூகநலக்கூடத்தில் அடைத்தனர். மாலையில்  அனை வரும் விடுவிக்கப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner