எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர், செப். 11- வேலூர் நகரை சுற்றி மட்டும் 500 செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த சூளைகளில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 70 லட்சம்  செங்கல் உற்பத்தி செய்யப்படு கின்றன.

இதில் உள்ளூர் தேவை 10 லட்சம் செங்கல் மட்டுமே. மீதி அனைத்தும் சென் னைக்கும், சென்னை புறநகர் பகுதிகளுக்கும் செல் கின்றன. இதனால் உள்ளூரில் மட்டுமே செங்கல் ஒன்றின்  விலை சூளையில் ரூ.4.70 ஆக வும், டெலிவரியுடன் சேர்த்து ரூ.7.50 வரையும் ஆகிறது. இந்த நிலை கடந்த ஓராண்டில் ஏற்பட்ட மாற்றம் என்கிறார் செங்கல் உற்பத்தியாளர் ஒருவர்.   அத்துடன், இன்று செங்கல் உற்பத்திக்கு மூலப்பொரு ளான களிமண் மற்றும் செம் மண் போன்றவற்றை அனுமதி பெற்ற தனியார் நிலங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இடங்களில் விலை கொடுத்து வாங்குவதே இந்த  விலை யேற்றத்துக்கு முக்கிய கார ணம். ஒரு காலத்தில் ஏரிகளி லேயே களிமண் அல்லது செம் மண்ணை பெருமளவு பெற்று வந்தோம். அல்லது தனியார் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அங்கேயே மண் எடுத்து செங் கல் உற்பத்தி  செய்து வந்தோம்.

மணல் தட்டுப்பாடு மட்டு மின்றி, சிமென்ட், கம்பி விலை உயர்வு, கட்டுமான தொழிலா ளர் கூலி உயர்வு என்று பல காரணங்களால் கட்டுமான பணிகள் 60 சதவீதத்துக்கும் மேல் முடங்கியுள்ளன. இதன் காரணமாக செங்கல்  உற்பத்தி யும் தொடர்ந்து சரிந்து வருவது டன், பலர் இத்தொழிலை விட்டு விலகி சென்று கொண்டு உள்ளனர் என செங்கல்  உற் பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

.