எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 14- தமிழகத்தில் மிகக் குறைவான மாணவர்கள் படிக்கும் 662 பள்ளிகளை மூடி விட பள்ளிக் கல்வித்துறை நட வடிக்கை எடுத்துள்ளது. மூடப் படும் பள்ளிகளை நூலகங் களாக மாற்றவும் பள்ளிக் கல்வித் துறை முயற்சி வருகிறது.

தமிழகத்தில் 53 ஆயிரம் தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 80 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவ, மாணவியர் எண்ணிக்கையை பொறுத்தவரையில் மேற்கண்ட அளவில் இருக்கிறதா என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.  வகுப்பு ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் இருக்க வேண்டும் என்ற  அளவில் ஆய்வு நடத்தியதில் 900 பள்ளிகளில் 10க்கும் கீழ் குறைவாகவே மாணவ, மாண வியர் படித்து வந்தது கண்ட றியப்பட்டது.

இதையடுத்து அந்த பள்ளி களில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச் சர் செங்கோட்டையன் உத்தர விட்டார். அதன் பேரில் மேற் கண்ட பள்ளிகளில் பணியாற் றும் தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் அதிரடி நடவடிக்கையில் இறங்கியதில் 238 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது.  மீதம் உள்ள 662 பள்ளிகளில் மாண வர் சேர்க்கை அதிகரிக்கவில்லை. 10 மாணவர்களுக்கு குறைவா கவே இருந்தது. அதனால் அந்த பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க இம் மாத இறுதிவரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் எதிர்பார்த்தபடி இம்மாத இறுதிக்குள் அந்த பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத நிலை நீடிக்கிறது. அதனால், அந்த பள்ளிகளில் தற்போது படித்து வரும் சொற்ப மாணவ, மாணவியரை அருகில் உள்ள தொடக்கப் பள் ளிகளில் சேர்ப்பதுடன், ஆசிரி யர்களையும் அந்த பள்ளிக ளுக்கு மாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. அதன் காரண மாக, தற்போது 662 பள்ளிகள் மாணவர்கள் இன்றி காலியாகி விடும். எனவே அந்த பள்ளி களை மூட வேண்டிய கட்டா யம் ஏற்பட்டுள்ளது. இருப்பி னும் 662 பள்ளிகளின் கட்டிடங் களில் நூலகங்களை திறக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிகளை மூடுவதற்கு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பள்ளிகளை மூடக் கூடாது. அருகில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை மாற்றினால் மாணவர்கள் நீண்ட தூரம் சென்று வர வேண்டிய நிலை ஏற்படும். மேலும் அருகாமை பள்ளிகள் என்ற அமைப்பு பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner