எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, அக்.11 கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாதவரத்தில் புதிய அடுக்குமாடி புறநகர் பேருந்து நிலையத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடை பெற்றது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், சென்னையில் இருந்து வடக்கே உள்ள திரு வள்ளூர், திருப்பதி, காளகஸ்தி, நெல்லூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கென மாதவரத்தில் 8 ஏக்கர் நிலப் பரப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, ரூ.95 கோடியில் கட்டி முடிக்கப்பட்ட மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தை முதல்வர் பழனிசாமி புதன் கிழமை திறந்து வைத்தார்.

வசதிகள்: புதிய பேருந்து நிலையமானது அடித்தளம், தரைத்தளம், மேல்தளம் ஆகிய வற்றை உள்ளடக்கி கட்டப்பட் டுள்ளது. பேருந்து நிலையக் கட்டடத்தின் அடித்தளத்தில் பயணிகள் வசதிக்காக 1,700 இருசக்கர வாகனங்கள் மற்றும் கட்டடத்தின் முன்பகுதியில் 72 மினி பேருந்துகள் நிறுத்துவதற் கான இடவசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.

தரைத்தளத்தில் பயணிகள் காத்திருப்பு இருக்கைகள், பொது கழிவறைகள், பயணச்சீட்டுகள் வழங்கும் இடங்கள், தாய்மார் களுக்கான பாலூட்டும் தனி அறை, உணவகம், ஏ.டி.எம். மய்யம் போன்ற வசதிகளும் செய் யப்பட்டுள்ளன.

மேல்தளத்தில் அவசர சிகிச் சை அளிக்க மருத்துவ வசதி, பயணிகள், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்வு அறைகள் ஆகியன அமைக்கப் பட்டுள்ளன.

மேலும் இந்தப் பேருந்து நிலையத்தில் சிமென்ட் கான் கீரிட் நடைபாதை, மழைநீர் வடி கால் வசதி, குடிநீர் வழங்கல் -கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி, தீயணைப்பு வசதி, உயர் மின் விளக்கு கம்பங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner