எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ.8 சேலத்தில் 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 15 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய, மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளதாக, எஸ்.சி., எஸ்.டி. தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், சென்னையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை மேலும் கூறியது: கொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்துக்கு வன்கொடு மைத் தடுப்புச் சட்டத்தின்படி இடைக்கால நிவாரணமாக ரூ.4 லட்சத்து 12 ஆயிரத்து 500 முதல் தவணையாக கொடுக்கப்பட் டுள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் இந்த வழக்கின் தற்போதைய நிலை தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் கூடுதல் நிவாரணம் வழங்கவும், ராஜலட்சுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், மாநில அரசிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது. போக்ஸா சட்டத்தின்கீழ் இந்த வழக்கு விசாரணை நடத்தப்படுவதால், மகளிர் நீதிமன்றத்தில் 15 நாள்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் அவரை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பட்டியலின வகுப்பினரின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதி, வேறு திட்டங்களுக்கு திருப்பி விடப்படுகிறது.

ஆனால் ஆந்திரம், கருநாடகம் உள் ளிட்ட அண்டை மாநிலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. தமிழகத்தில் அதுபோன்ற சட்டம் இல்லை. மேலும், தமிழகத்தில் 10,000 ஏக்கர் பரப்பளவிலான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 1,000 பேருக்கு தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது. கோவை, சேலம், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பஞ்சமி நிலங்கள் வர்த்தக நோக்கங் களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின் றன. இந்த நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க மாவட்ட மற்றும் மாநில அளவிலான அதிகாரிகளிடம் அறிவுறுத்தி யுள்ளதாக முருகன் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner