எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ. 8- ஒருங்கிணைந்த பொறியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்காக, அவற்றை பதிவேற்றம் செய்த வர்கள் மற்றும் செய்யாதவர் களின் பட்டியலை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

ஒருங்கிணைந்த பொறியா ளர் பணியிடங்களுக்கு டிஎன் பிஎஸ்சி சார்பில், கடந்த பிப்ர வரி 24 -ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதன டிப்படையில், முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு 332 விண்ணப்பதாரர்கள் சான்றி தழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இரண்டாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கு தெரி வான 292 பேரின் பதிவெண்கள் வெளியிடப்பட்டு, சான்றிதழ் களை பதிவேற்றம் செய்ய அக் டோபர் 4 முதல் அக்டோபர் 17 ஆம் தேதி வரை அனுமதிக் கப்பட்டனர். முதல் மற்றும் இரண்டாம்கட்ட சான்றிதழ் சரி பார்ப்புக்காக சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தவர்கள் மற் றும் பதிவேற்றம் செய்யாதவர் களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது. இந்த பதிவேற்ற நிலை குறித்த விவரத்தை பதிவெண் மற்றும் பிறந்த தேதியை உள் ளீடு செய்து, நவம்பர் 14 -ஆம் தேதி வரை விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம். இதில் சந்தேகங்கள் இருந்தால், நவம்பர் 8 முதல் 14 - ஆம் தேதி வரை 044 - 2530 0597 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10.30 முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம். சான் றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர் தரவரிசை மற்றும் இனசுழற்சி யின் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்குத் தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner