எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, நவ. 8- நிகழாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறையை அமல்படுத்துவதற் கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரி யர்களுக்கு பயோ-மெட்ரிக் வரு கைப் பதிவு முறை அமல்படுத் தப்படும் என கடந்த மே மாதம் 30-ஆம் தேதி நடந்த பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் கே.ஏ. செங் கோட்டையன் அறிவித்தார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறையை அமல் படுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாரணையில், தமிழகத்தில் 3,688 உயர்நிலைப் பள்ளிகல், 4,040 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 728 பள்ளிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்படும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ரூ.15 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளார். இதன் மூலம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு தாமத மாக வருவதைத் தவிர்க்க முடி யும் என பள்ளிக் கல்வித் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஏற்கெனவே பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டம், பெரம் பலூர் அரசுப் பள்ளிகளிலும், போரூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சோதனை அடிப் படையில் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner