எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேடசந்தூர், ஜன- 11- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறும்போது, `பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்றுகூற தம்பிதுரைக்கு அதிகாரம் உள்ளதா’ என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு, `பொன்.ராதாகிருஷ் ணன் அவரது கட்சி வேலையை பார்க்கட்டும். கூட்டணி குறித்து கூற அவருக்கு அதிகாரம் இல்லை’ என தம்பிதுரையும், அமைச்சர் கடம்பூர் ராஜுவும் நேற்று பதிலடி கொடுத்து உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் அதிமுக விளம்பர வாகனத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மக்க ளவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘எனக்கு யார் பதவி கொடுத்தார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் பேசி யுள்ளார். நான் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாள ராக பதவி வகித்து வருகிறேன்.

பொன்.ராதாகிருஷ்ணன் அவரது கட்சி வேலையை பார்க்கட்டும். கூட்டணி குறித்து நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. கூட்டணி பற்றி முடிவு எடுக்க ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளனர். எனவே அவர் அதிமுக பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை’’ என்றார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டியில், ``அதிமுக தேர்தல் கூட்டணி தொடர்பாக தம்பிதுரை தெரிவித்திருப்பது, அவரது சொந்த கருத்தாகும். தம்பிதுரைக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வதற்கு, மத்திய அமைச் சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அதிகாரம் இல்லை. கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டை அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தேர்தலுக்கு முன்பு எடுப்பர்’’ என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner