எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜன. 11- போலியாகவும், தரமற்ற வகையிலும் மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்த நிறுவனங்கள் மற்றும் மருந் தகங்கள் மீது நிகழ் நிதியாண்டில் 403 வழக் குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீதான விசாரணை நடவடிக்கைகள் தீவிர மாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் கூறப் படுகிறது.

அதன்பேரில், 33 விநியோக நிறுவனங்கள் மற்றும் மருந்துக் கடைகளின் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது, நிகழாண்டில் வழக்குகளின் எண்ணிக்கையும், அதன்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை களும் அதிகமாக உள்ளதாக மருந்து கட்டுப் பாட்டு இயக்குநரகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. தமிழகத்தில் 39,500 மருந்தகங்கள் உள்ளன; அதேபோன்று நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம் கண்காணித்து வருகிறது.

குறிப்பாக, மருந்துகளின் தரம், விலை உள்ளிட்டவை ஆய்வுக்குட்படுத்தப்படுகின் றன. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 328 வகையான மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதுபோன்ற முறைகேடுகளோ, விதிமீறல் களோ கண்டறியப்பட்டால், உரிய விசார ணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

அதன்படி, தமிழ்நாடு மருந்து கட்டுப் பாட்டு இயக்குநரகம் சார்பில் இதுவரை பல்லாயிரக்கணக்கான விதிமீறல் சம்பவங் கள் விசாரணைக்கு முன்மொழியப்பட்டுள் ளன. அவற்றில் 97 சதவீத வழக்குகளில் குற் றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகி றது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை மாநிலம் முழுவதும் 403 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் தர மற்ற மருந்துகளை உற்பத்தி செய்ததாக 81 வழக்குகளும், போலி மருந்துகள் தயாரித்த தாக 5 வழக்குகளும் பதிவாகியுள்ளன.

அதன் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்த 14 நிறுவனங்கள் மீதும், பிற மாநிலங் களைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 67 நிறுவனங்கள் மீதும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளன.

இதைத் தவிர, மருந்தாளுநர் இல்லாம லும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் செயல்பட்ட 312 மருந்தகங்கள் மீது நடவ டிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று பொய்யான விளம்பரங்கள் மூலம் மருந்து களை விற்பனை செய்ததாகவும், அதிக விலைக்கு மருந்துகளை விற்றதாகவும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner