எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 14- கோடைக் காலம் இன்னும் முழுமையாக தொடங்குவதற்கு முன்பாகவே, மின்தேவை 15,600 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. இதுவரும் நாட்களில் 17 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தினசரி மின் தேவை சராசரியாக 14 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு உள்ளது. இது மழைக் காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்தும் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக 15 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு அதிகரித் தும் காணப்படுகிறது. மழை குறைவுகடந்த 2 ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய் யாததால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.

இதன்காரணமாக, மின்சாத னங்களின் பயன்பாடு அதிக ரித்து மின்தேவையும் அதிக ரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி மின்தேவை மிக அதிக அளவாக 15,440 மெகாவாட் அளவுக்கு அதிகரித் தது. இதுதான் இந்த ஆண்டுக் கான உச்சபட்ச அளவாக இருந் தது. இந்நிலையில், மின் தேவை 15,600 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆ-ம் தேதி இந்த அளவு எட்டப்பட்டது.

கோடைக்காலம் தொடங்கு வதற்கு முன்பாகவே மின் தேவை இந்த அளவுக்கு அதி கரித்துள்ளது. வெயில் உச் சத்தை எட்டும்இந்நிலையில், வரும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் உச்சத்தை எட்டும். அப்போது, மின்தே வையும் 17 ஆயிரம்மெகாவாட் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடையில் மின்வெட்டை சமாளிக்க மின்வாரியம் மின் உற்பத்தியையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

தேவைப்பட்டால் தனியா ரிடம் இருந்து கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ள தாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner