எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியா - இலங்கை அரசுகளை கண்டித்து
ராமேசுவரம் மீனவர்கள்
போராட்டம் நடத்த முடிவு

ராமேசுவரம், ஜன.1 எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுதலை செய் வதாக இலங்கை அரசு சமீபத்தில் அறிவித்தது. ஆனால் சிறைபிடித்த படகுகள் குறித்து எந்த அறி விப்பும் வெளியாகவில்லை.

ஓரிரு தினங்களில் மீனவர்கள் விடுதலையாவார்கள் என்று அவர்களது உறவினர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

இந்த நிலையில் இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர, கொழும்பில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர் களின் 122 படகுகளும் அரசுட மையாக்கப்பட்டதாகவும், தமிழக மீனவர்கள் மட்டும் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

இதுகுறித்து ராமேசுவரம் மீனவர் சங்க தலைவர் போஸ் கூறியதாவது:-

122 படகுகளும் அரசுட மையாக்கப்பட்டதாக இலங்கை அமைச்சர் கூறி இருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு முறையும் படகு கள் கைப்பற்றப் படும்போது மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை.

மத்திய அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும், இலங்கை அரசின் நடவடிக்கையை கண் டித்தும் தமிழகத்தில் உள்ள மீனவர்களை ஒருங்கிணைத்து மாநில அளவிலான போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner