எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்: மோடிக்கு மம்தா சவால்

கொல்கத்தா, ஜன. 4- ரோஸ் வேலி நிதி நிறுவன மோசடி வழக்கில் திரிணாமுல் காங் கிரஸ் கட்சியின் இரண்டு எம். பி.க்கள் கைது செய்யப்பட்ட தையடுத்து அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்காள மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி கொல்கத்தா வில் செய்தியாளர்களை சந்தித் தார். அப்போது அவர் கூறியதா வது:-

எங்கள் கட்சியின் மக்கள வைத் தலைவரான சுதீப் பண் டோபாத்யா கைது செய்யப் படுவார் என நினைக்கவில்லை. அபிஷேக் பானர்ஜி, சோவன் சாட்டர்ஜி (நகர மேயர்), பர்கத் ஹக்கிம் (அமைச்சர்) போன்ற பிற தலைவர்களை கைது செய்ய மோடி விரும்புவதாக எனக்கு தகவல் கிடைத்தது.

சுதீப் கைது செய்யப்பட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந் தது, ஆனால் பயப்படவில்லை. எங்கள் அனைவரையும் கைது செய்யட்டும். என்னையும் கூட அவர் கைது செய்யட்டும் என வெளிப்படையாக சவால் விடுகிறேன். அவரது தைரி யத்தை பார்ப்போம். அவர் மற்றவர்களின் வாயை அடைக் கலாம், ஆனால் என்னிடம் நடக்காது. எனது குரலை அவரால் ஒடுக்க முடியாது. மக்களின் குரலையும் ஒடுக்க முடியாது. ஒவ்வொரு வழக்கையும் நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மேதினிபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, மோடியை கடுமையாக சாடினார். பணமதிப் பிழப்பு நடவடிக்கையை கண்டித்து போராடுவோருக்கு எதி ராக சி.பி.அய்., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித் துறையினரை மோடி பயன்படுத்துவதாக அவர் கூறினார். மேலும், சுதீப் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner