எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இப்படி ஒரு சுவரொட்டி

திறந்தவெளியில் மலம் கழித்தால் மரண தண்டனை

போபால், ஜன.9 மத்திய பிரதேச மாநிலத்தில், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில், ‘திறந்த வெளியில் மலம் கழித்தால், விரைவில், மரண தண்டனை வழங்கப்படும்‘ என, சுவ ரொட்டி ஒட்டப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ம.பி.,மாநிலத்தில்,முதல் வர், சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ.க., ஆட்சிநடக்கிறது.இம்மாநிலத் தில்,தூய்மைஇந்தியாபிரச்சார திட்டத்தை நடைமுறைப்படுத்த, அரசு நிர்வாகங்கள், பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்துவரு கின்றன.வீடுகளில்கழிப்பறை கட்டாதவர்களுக்கு,ரேஷன் பொருள்கள்விநியோகம் நிறுத்தம் போன்ற நடவடிக் கைகள் எடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஜாபுவா மாவட்டத்தில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மேகநகர் பகுதியில்,தூய்மைஇந்தியா திட்டசுவரொட்டிஒட்டப் பட்டுள்ளது.அதில்,‘திறந்த வெளியில் மலம் கழிப்பவர் களுக்கு, விரைவில் மரண தண்டனை வழங்கப்படும்‘ என்ற வாசகம் இடம் பெற் றுள்ளது.

அதிகாரிக்கு அறிவிக்கை

இந்தச் சுவரொட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். சுவரொட்டியில் இடம் பெற்ற வாசகத்தை மாற்றும்படி, மேக நகர் நகராட்சி அதிகாரிக்கு, ஆட்சியருக்கு ‘நோட்டீஸ்’ அனுப்பினர்; இந்த விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner