எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெங்களூரு, ஜன.21 பெங்களூ ருவில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆய்வு மாணவர் கன்னைய்ய குமார், புதிய அரசி யல் தலைவர்கள் உருவாவதை அரசியல்வாதிகள் விரும்ப மாட் டார்கள் என்று கூறியுள்ளார்.

“நான் எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டேன், புதிய கட்சியும் தொடங்க மாட்டேன். நான் ஒரு ஆய் வாளர், எனவே ஆசிரியர் பணிதான் எனக்கு சிறந்தது. ஆனால் அரசியல், சமூக இயக்கத்திற்கான தொடர்பை கட்டமைப் பதில் கடினமான முனைப்பு காட்டுவேன். இதற்கு கல்வி நிலையங்களில் வலுவான, அதிர்வூட்டும் மாண வர் கூட்டமைப்பு தேவை.

பல மாநிலங்களில் மாண வர் சங்க தேர்தல் தடை செய் யப்பட்டுள்ளது. கர்நாடாகாவும் இதில் ஒன்று. பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் மாண வர் சங்கங்களிலிருந்தவர்கள் முதல்வராக உயர்வு பெற்ற போதும் இம்மாநிலங் களிலும் மாணவர் சங்க தேர்தல் தடை செய்யப்பட்டுள்ளன. ஏனெ னில் ஏற்கெனவே இருக்கும் அமைப்பை கேள்விக்குட் படுத்தும் புதிய தலைவர்கள் எழுச்சியுறுவதை அரசியல் வாதிகள் விரும்புவதில்லை.

நாட்டில் மூச்சுக்குழலை நசுக்கும் ஒரு சூழல் நிலவு கிறது, உண்மையில் பேச்சு, கருத்துச் சுதந்திரம் கடுமையாக அடக்கி ஒடுக்கப்படுகிறது. கருத்துகளை கூறுவதற்காக மாணவர்கள் தண்டிக்கப்படு கின்றனர். ஜே.என்.யூ. மாணவர் நஜீப் அகமது, இவர் முதலாம் ஆண்டு பயோ-டெக் மாணவர், இவர் காணாமல் போய் பல மாதங்கள் ஆகியும் இதுவரை நடவடிக்கை இல்லை. கடை சியாக நஜீபுடன் சண்டையிட்ட அகில் பாரதிய வித் யார்த்தி பவன் மாணவர்கள் 3 பேர் மீது எந்த ஒரு நடவடிக் கையும், விசாரணையும் இல்லை.

இது கல்வி நிலையங்கள் தங்களது தன்னாட்சி அதிகாரத் தில் எந்த அளவுக்கு சமரசம் செய்து கொண்டுள்ளன என்ப தையே இந்த நிலவரங்கள் காட்டுகின்றன.
எனவே நானும் மற்ற மாணவர் சங்கத் தலைவர்களும் கல்வி நிலையங்களில் மாணவர் சங்க தேர்தல் தேவை என்று கருதுகிறோம், உச்ச நீதிமன்றம் நியமித்த லிங்தோ கமிட்டியும் இதையே பரிந் துரை செய்துள்ளது.

நாட்டில் சமூகத்திற்கும் அரசியல் இயக்கங்களுக்கும் மிகப்பெரிய இடை வெளி உள்ளது. சமூக இயக்கங்களில் எழுப்பப்படும் விவகாரங்கள் அரசியல் தளத்தில் கேள்வி களாக உருப்பெறுவ தில்லை. அரசியல் கட்சிகள் அனைத்தும் சமூகத்துடன் தொடர்பை இழந்து விட்டன.  கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா பெண்களைப் பற்றி அவ்வாறு கருத்துக் கூறியது வருத்தத்திற் குரியது, பெண்களை பாலியல் துன் புறுத்தலுக்கு ஆளாக்குபவர்கள் பற்றி பேசாமல் பெண்களைப் பற்றி அவர் பேசுவது மோச மானது.
இங்குள்ள காங்கிரஸ் கட்சிக்கும் மத்தியில் ஆளும் கட்சிக்கும் வித்தியாசம் ஏது மில்லை. இருவருமே மாண வர்களை தேச விரோத வழக் கில் சிக்க வைக்கின்றனர்” என்றார் கன்னைய்யகுமார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner