எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பா.ஜனதாவுக்கு எதிராக
மாயாவதி கட்சியுடன் லாலு, சரத்யாதவ் கூட்டணி

லக்னோ, ஜன.22 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. பா.ஜன தாவை வீழ்த்த மற்ற கட்சிகள் புதிய கூட்டணி வியூகம் அமைத்து வருகின்றன.

இந்த தேர்தலில் ராஷ்டீரிய ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம் மற்றும் பல சிறிய கட்சிகள் 403 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றன. இதனால் ஓட்டுகள் பிரியும் என்பதால் இந்த ஓட்டுகளை பா.ஜனதாவுக்கு எதிராக ஒன்று சேர்க்க வேண்டும் என்று லல்லு கட்சி மற்றும் சரத்யாதவ் கட்சி தலைவர்கள் கூறி வரு கிறார்கள்.

இதையடுத்து மாயாவதி யின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் ராஷ்டிரிய ஜனதா தளம், அய்க் கிய ஜனதா தளத் கட்சிகள் கூட் டணி சேர முடிவு செய்துள்ளன.

இதுதொடர்பாக லாலு மற் றும் சரத்யாதவ் கட்சி நிர்வாகி கள் கூறும்போது, “பா.ஜனதா கட்சியை தோற்கடிக்க உத்தர பிரதேசத்தில் பலம் வாய்ந்த கூட்டணி தேவை, தனித்தனி யாக நிற்பது, பா.ஜனதாவுக்கு சாதகமாக அமைந்து விடும்.

எனவே பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி சேர வேண்டும், பா.ஜனதாவை வீழ்த்த 1993ஆ-ம் ஆண்டு தேர்த லில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி சேர்ந்து ஆட்சியை பிடித்தது. இதன்மூலம் பா.ஜனதா ஆட் சிக்கு வருவது தடுக்கப்பட்டது.

எனவே தற்போதைய தேர் தலில் சமாஜ் கட்சியுடன் ராஷ் டீரிய ஜனதா தளம், அய்க்கிய ஜனதா தளம் கட்சிகள் கூட் டணி அமைக்க வேண்டும் என்று கூறினார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner