எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாட்னா, ஜன.25 பண மதிப்பிழப் பினால் விளைந்த பலன்கள் குறித்து நாட்டு மக்களிடம் மத்திய அரசு விளக்க வேண்டும் என பீகார் முதல்வர் நித்திஷ் குமார் தெரிவித்தார்.

அய்க்கிய ஜனதா தளத்தின் சார்பில் பாட்னாவில் செவ் வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அக்கட்சி யின் தேசியத் தலைவரும், மாநில முதல்வருமான நித் திஷ் குமார் பங்கேற்றுப் பேசி யதாவது:

உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பின் பின்னணியில் உள்ள நோக்கம் சரியானது என்பதால்தான், அதை நாங்கள் வரவேற்றோம். முறையாக கணக்கில் காட்டப் படாத பணம், முதலீடு என்ற வகையில் வங்கிகளுக்கு திரும் புவதில் என்ன தீங்கு இருக்க முடியும்?

அதேசமயம், வங்கிகளுக்கு எவ்வளவு கருப்புப் பணம் திரும்பியது என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்தையொட்டி, 50 நாள்களுக்கு பொறுமை காக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

தற்போது, 77 நாள்கள் கடந்து விட்டது. இந்தத் திட்டத்தால் விளைந்த நல்ல பலன்கள் குறித்துமோடிவிளக்கவேண் டும். அவருடைய பதிலுக் காக, நாட்டு மக்கள் காத்தி ருக்கிறார்கள்.

பண மதிப்பிழப்பினால் முறைசாரா தொழிலாளர்கள் பலர் வேலைவாய்ப்பை இழந் துள்ளனர். அவர்களுக்கு, மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார் நித்திஷ் குமார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner