இந்தியாவிலேயே முதல் முறையாக ‘இ ஹெல்த்’ திட்டம்
கேரளாவில் அறிமுகம்
திருவனந்தபுரம், ஜன.25 இந்தியா விலேயே முதல் முறையாக பொதுமக்களின் உடல்நலம் குறித்த விவரங்களை கணினி மய மாக்கும் ‘இ ஹெல்த்’ திட்டம் கேரளாவில் அறிமுகப்படுத்தப் படுகிறது. கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.லதிகா நேற்று
முன்தினம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:
கேரளாவில் பொதுமக்களின் உடல்நலம் குறித்த அனைத்து விவரங்களையும் கணினி மய மாக்கும் திட்டம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டம் இந்தியாவிலேயே கேரளாவில் தான் முதல்முறையாக அறிமுகப் படுத்தப்படுகிறது. இதன்படி சுகாதாரத் துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று அனைவரின் உடல் நலம் குறித்த விவரங்களை சேகரிப்பார்கள். இதற்காக ஊழி யர்கள் அனைவருக்கும் கணிப் பலகை (டேப்லட்) வழங்கப் படும். பொதுமக்களின் அனைத்து உடல்நலம் குறித்த விவரங் களையும் ஊழியர்கள் கணிப் பலகை மூலம் சேகரிப்பார்கள்.
இந்த விவரங்கள் உடனுக் குடன் மாநில கணினி ஆவண காப்பகத்தில் பதிவாகும். இது தவிர அனைத்து அரசு மருத்துவ மனைகளுக்கு செல்லும் நோயாளி களின் விவரங்களும் உடனுக் குடன் கணினியில் பதிவு செய் யப்படும். முதல்கட்டமாக 7 மாவட்டங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
2 ஆண்டுகளில் முதல்கட்ட நடவடிக்கை முடிவடையும். இதன் பிறகு அடுத்த கட்டமாக மீதமுள்ள 7 மாவட்டங்களில் விவர சேகரிப்பு பணிகள் தொடங்கும். இவ்வாறு சேகரிக் கும் அனைத்து விவரங்களும் ஆதாருடன் இணைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.