எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதி, மதம் போன்றவற்றை உடைத்தெறிந்த
போராட்டமாக ஜல்லிக்கட்டு இருந்தது
மார்க்கண்டேய கட்ஜு பாராட்டு

புதுடில்லி, ஜன.25 ஜாதி, மதம் போன்றவற்றை உடைத்தெறிந்த போராட்டமாக ஜல்லிக்கட்டு இருந்தது என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “ஜல்லிக்கட்டு போராட்டத்தை நடத்திய தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜாதி, மதம் போன்றவற்றை உடைத்தெறிந்த போராட்டமாக ஜல்லிக்கட்டு போராட்டம் இருந் தது. ஜல்லிக்கட்டுக்கான தமிழ் மக்களின் போராட்டம் நாட்டிற்கே வழிகாட்டும் போராட்டமாக இருந்தது. மொத்த இந்திய மக்க ளும் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் முன்னெடுத்த போராட்டம் தமிழர் வாழ்க்கையை சிறப்பாக மாற்ற உதவும்.

தமிழ் மக்கள் வாழ்க” என்று இளைஞர் களின் போராட்டத்தை வாழ்த்தி யிருக்கிறார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு மார்க்கண்டேய கட்ஜூ சமூக வலைதளங்களின் மூலம் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner