எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கர்நாடகம், மகாராஷ்டிரத்தில் பாரம்பரிய விளையாட்டுகளை ஆதரித்துப் போராட்டம்

பெங்களூரு, ஜன.26 கர்நாடகத்தில் கம்பளா எனும் பாரம்பரிய எருமைப் பந்தய விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் தொடங்கியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் மாட்டு வண்டி போட்டிக்கான தடையை எதிர்த்து போராட்டம் நடத்த இருப்பதாக விவசாயிகள் அமைப்பு கூறியுள்ளது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் மங்களூருவில் துளுநாடு ரக்ஷண வேதிகே அமைப்பின் சார்பில் கம்பளா விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் யோகிஷ் ஷெட்டி கூறியதாவது:

கர்நாடகத்தின் கடலோர மாவட்ட மக்களின் பாரம்பரிய விளையாட்டான கம்பளாவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும். ஏனெனில், கம்பளா விளையாட்டு துளுநாட்டின் கலாசாரம். அதற்கு தடை விதித்துள்ளது அப்பகுதி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது என்றார்.

இதனிடையே, மைசூரு விமான நிலையத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை கூறியதாவது: கம்பளா விளையாட்டுக்கு தடை விதிக் கப்பட்டுள்ளது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து கம்பளா விளை யாட்டு நடத்துவது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப் பட்டால், கர்நாடகத்தில் கம்பளா விளையாட்டை நடத்த அவசரச் சட்டம் இயற்றப்படும் என்றார்.

மகாராஷ்டிரத்தில்....

மாட்டு வண்டிப் போட்டி: மகாராஷ்டிரத்தில் மாட்டு வண்டிப் போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென்று விவசாயிகள் அமைப்பான சேத்காரி சங்கடனா வலியுறுத்தி யுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

புனே மாவட்டத்தைச் சேர்ந்த சிவசேனை எம்.பி. மிராஜ் இது தொடர்பாக கூறியதாவது:

விவசாயிகள், மாட்டு வண்டி வைத்திருப்போர், அரசியல் கட்சிப் பிரநிதிகள் பங்கேற்ற கூட்டத்தை நடத்தினோம். இதில், மாட்டு வண்டிப் போட்டிக்கான தடையை நீக்காவிட்டால் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner