எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்

நடத்தப்பட்டால் செலவினம், நிர்வாகச் சுமைகள் குறையும்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

புதுடில்லி, ஜன.26 மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப் பட்டால் செலவினம் குறை யும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கருத்து தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஆண்டு தோறும் ஜனவரி 25-ஆம் தேதி தேசிய வாக்காளர் தினம் ஆக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி டில்லியில் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் புதன்கிழமை கொண் டாடப்பட்ட நிகழ்ச்சியில் குடி யரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தின ராகக் கலந்து கொண்டு பேசி யதாவது:

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று நீண்டகாலமாக ஒரு யோசனை கூறப்பட்டு வருகிறது. இந்த விஷயத்தில் அரசியல் கட்சி களிடையே ஒருமித்த கருத்தை எட்டி ஒரே நேரத்தில் மக்க ளவை, மாநில சட்டப் பேர வைகளுக்கு தேர்தல் நடத் துவதற்கான திருத்தத்தை அர சியலமைப்பில் செய்ய நட வடிக்கை எடுத்தால் மிகப் பெரிய பொருளாதார செல வினம், நிர்வாகச் சுமைகள் குறையும். இது பற்றி அனைத்து அரசியல் கட்சிகளுடன் விவா திக்கும் முன்னெடுப்பை தலை மைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டால் இந்த சீர் திருத்தம் சாத்தியமாகலாம்.

நேர்மை தவறாமை, ஒழுக்கம், கட்டுக்கோப்பான அமைப்புத் திறன் கொண்ட தேர்தல் ஆணையத்தால் இதை நிகழ்த்திக் காட்ட முடியும் என உறுதியாக நம்புகிறேன். தேர்தல் ஆணையத்தின் நேர் மையை எந்த வகையிலும் சந்தேகிக்க முடியாது.

இளைய தலைமுறையினரி டையே வாக்குரிமை செலுத் துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் ஆற்றி வரும் அயராத பங்க ளிப்பை வெகுவாகப் பாராட்டு கிறேன். அந்த முயற்சிக்கு நம்மால் இயன்ற ஒத்து ழைப்பை வழங்க வேண்டும். எந்த அரசுத் துறையையும் சாராமல் தன்னிச்சையான அமைப் பாக தேர்தல் ஆணையம் விளங்க வேண்டும். அதன் மூலம்தான் வலுவான இந்திய ஜனநாயகத்தை உருவாக்கும் முயற்சி ஈடேற முடியும் என்றார் பிரணாப் முகர்ஜி.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner