எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காத்மாண்டு, ஜன.26 நேபாளம் நாட்டில் இருந்து இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு காப்பீடு வழங்க அந் நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

நேபாளத்தில் இருந்து எல்லை கடந்து இந்தியாவிற்கு தினமும் அதிக அளவிலான மக்கள் தினசரி வேலைக்காக வருகின்றனர்.

வளைகுடா நாடுகளிலும், இந்தியாவின் பல பகுதிகளிலும் தங்கி பணிபுரியும் நேபாள நாட்டு தொழிலாளர்கள் விபத்து மற்றும் இயற்கை இடர் பாடுகளில் பாதிப்படைவதால் அவர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவ காப்பீடு வழங்க நேபாள பிரதமர் பிரசண்டா முடிவு செய்து இதற்கான லட்சிய திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.

அதன்படி நேபாள தொழி லாளர்களுக்கு ரூபாய் 20,00,000 மதிப்புடைய ஆயுள் காப்பீடு மற்றும் பொது காப்பீடு வழங் கப்படும் எனவும் இதற்கு, மாவட்ட அதிகாரிகளிடம் தொழிலாளர்கள் பதிவு செய்து, அதன் பின்னர் காப்பீடு வாங்க வேண்டும் என அரசு தெரிவித் துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் இந் தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரியும் 5 மில்லியன் நேபாள நாட்டு தொழிலாளர்கள் பயனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner