எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விசாகப்பட்டினம், ஜன.27 ஆந்திராவுக்கு சிறப்பு தகுதி வழங்கக் கோரி, விசாகப் பட்டினம் கடற்கரையில் அமைதிப் பேரணி நடத்த முயன்ற, தெலுங்கு நடிகர் சம் பூர்னேஸ் பாபு உட்பட, நூற் றுக்கணக்கானோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திர பாபு நாயுடு முதல்வராக உள்ளார்.

ஆந்திராவிலிருந்து, தெலுங் கானா பிரிக்கப்பட்டு தனி மாநிலம் உருவாக்கப்பட்டதை அடுத்து, அய்தராபாத், தெலுங் கானாவின் தலைநகராக அறி விக்கப்பட்டது. இதனால், விஜய வாடா அருகே, ஆந்திராவுக்கான புதிய தலைநகரை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆந்திரா வுக்கு சிறப்பு தகுதி வழங்க வேண்டும் என, அம்மாநில மக்கள் மற்றும் அரசியல் கட் சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, சென்னை மெரினா கடற்கரை யில் மாணவர்கள் நடத்திய அமைதி போராட்டத்தை போல், குடியரசு தினமான நேற்று, விசாகப்பட்டினம் கடற்கரையில் அமைதி பேரணி நடத்த, அந்த மாநில இளை ஞர்கள் திட்டமிட்டனர்.

இந்த பேரணியில் பங்கேற் குமாறு, 'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்' மூலம் தகவல் அனுப்பப்பட்டது. பிரபல நடி கரும், ஜன சேனா தலைவரு மான பவன் கல்யாண், இளை ஞர்களுக்கு முதலில் ஆதரவு தெரிவித்தார். அவரை தொடர்ந்து, தெலுங்கு நடிகர்கள் பலரும், பேரணிக்கு ஆதரவாக கருத்து பதியவிட்டதுடன், தாங்களும் அதில் பங்கேற்கப் போவதாகவும் அறிவித்தனர்.

ஒய்.எஸ்.ஆர்., காங்., தலை வரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான, ஜெகன் மோகன் ரெட்டியும், இளைஞர்களின் பேரணிக்கு ஆதரவு தெரிவித்தார். குடியரசு தினத்தன்று, கடற்கரையில் பேரணி நடந் தால், சட்டம் - ஒழுங்கு சீர் குலைய வாய்ப்பிருப்பதாக கரு திய காவல்துறையினர் அப் பகுதியில், 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். விசாகப்பட் டினம் கடற்கரையில் ஏராள மான காவல்துறையினர் குவிக் கப்பட்டனர்.

பெற்றோர் யாரும், தங்கள் பிள்ளைகளை பேரணிக்கு அனுப்ப வேண்டாம் என, மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்தி ருந்தார். எனினும், தடையை மீறி, நடிகர் சம்பூர்னேஸ் பாபு தலைமையில், நூற்றிற்கும் மேற்பட்டோர், நேற்று, விசா கப்பட்டினம் ராமகிருஷ்ணா கடற்கரையில் குவிந்தனர்.

இதையடுத்து, அவர்களை பேரணி நடத்த விடாமல் தடுத்த காவல்துறையினர், அங்கு கூடிய அனைவரையும் கைது செய் தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட் டது. எனினும், நிலைமையை காவல் துறையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner