எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

காந்திநகர் ஜன 28 பெண் சாமியார்  சிறீகிரி. என்பவர் ரூ.12 கோடி மதிப்பிலான தங்கம் வாங்கி விட்டு அதற்கான தொகையைத் தராமல் கடைக்காரரை மிரட்டிய விவகாரத்தில் காவல் துறையினர்  ஆசிரமத்தை சோதனையிட்ட போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தங்கக் கட்டிகள் மற்றும் ஒன்றரை கோடி மதிப்புள்ள புதிய ரூ.2000  நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. இந்த பெண் சாமியார் அப்பகுதியில் உள்ள கோவிலின் அறங்காவல ராகவும் உள்ளார்.

குஜராத்தின் வடக்கு மாவட்டமான பனாஸ் என்ற இடத்தில் உள்ள சிறீகிரி என்ற பெண் சாமியார் அப்பகுதியில் மிகவும் பிரபலமானவர், அவர் பனாஸ் கந்தா மாவட்ட இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்புத் தலைவ ராகவும் உள்ளார். அதே போல் பனாஸ் நகரில் உள்ள முகேஷ்வர் கோவிலின் அறங் காவலராகவும் உள்ளார். இவர் குஜராத்தில் பிரபல மடமான முகேஷ்வர் மடத்தின் தலைமை நிர்வாகியாவும் பதவி வகிக்கிறார்.

இவர் பனாஸ் நகரில் உள்ள ஒரு கடையில் ரூ.12 கோடிக்கு, கோவில் பெயரில் தங்க நகைகளாக வாங்கியுள்ளார். நீண்ட நாட்களாக இவர் நகைக்கான பணம் தராமல் ஏமாற்றியதால். நகைக்கடை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த புகாரை அடுத்து குஜராத் காவல் துறையினர், பெண் சாமியாரிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அந்த பெண் சாமியார், தான் நகை வாங்கவில்லை என்றும் எனது பெயரில் யாரோ ஒருவர் வாங்கியதற்கு நான் பொறுப்பு அல்ல என்று பதில் கூறினார். இதை ஏற்றுக்கொள்ளாத காவல்துறையினர் பனாஸ் கந்தா அரண்மனையில் உள்ள இவரது ஆசிரமத்தை சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவரது தனி அறையில் இருந்து தங்க கட்டிகள், கடைக்காரரிடம் வாங்கிய நகைகள் மற்றும் வேறு சில கடைகளில் வாங்கிய தங்க நகைகள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அங்கே புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பது தெரியவந்தது, மிகவும் அதிக அளவில் இருந்ததால் வருமான வரித்துறையினர் ரூபாய் எண்ணும் இயந்திரத்துடன் வந்து, ரூபாயை எண்ணும் பணியைத்துவங்கினர். ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுகளும் 500 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மேலும் 100 ரூபாய் நோட்டுகளை என்னும் பணியைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

மேலும் மது புட்டிகள் மற்றும் கருத்தடைச் சாதனங்களும் அவரது அறையில் இருந்து காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். பணம் மற்றும் நகைக்கான சரியான கணக்கு காட் டாதால் சட்டவிரோத முறையில் பணம் சேர்த்த குற்றத்திற்காக   பனாஸ்கந்தா காவல்துறையினர் பெண் சாமியார் சிறீகிரியைக் கைது செய்துள் ளனர். மேலும் அவரது ஆசிரம ஊழியர்கள் பலரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக சார்பில் நடத்தப்பட்ட ஒரு கலைநிகழ்ச்சியை இவர் முன்னின்று நடத்திவைத்தார் அதே நேரத்தில் அந்த கலைநிகழ்ச்சியில் நடனமாடிய ஒரு பெண் மீது உற்சாக மிகுதியில் ரூ.ஒரு கோடிக்கு மேல் பணத்தை இவரும் இவரது கூட்டாளிகளும் வீசி எறிந்தது பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது,  இவரிடம் விலை உயர்ந்த 2 நவீன ரக கார்கள் உள்ளன. இதில் ஒன்றில் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்டு அதில் தான் அவர் பயணிப்பார் என்று உள்ளூர் தொலைக் காட்சி ஒன்று செய்தி வெளியிட் டுள்ளது.

ஆஜ்தக் என்ற இந்தி தொலைக்காட்சி, இந்த பெண் சாமியார் சிறுமிகளை கடத்தி பாலியல் தொழிலுக்காக விற்றுவருகிறார் என்று கடந்த ஆண்டு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது, ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்து மாறு கூறியபோது சான்றுகள் எதுவுமில்லாமல் காணொலிக் காட்சிகளை வைத்து நடவடிக்கை எடுக்க முடியாது என்று காவல்துறை கூறிவிட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner