எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மஜிதா, ஜன. 28- அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பதன் மூலம் ஊழல் மற்றும் இனவாதத்தில் மோடி யின் இரட்டை வேடம் வெளிப் பட்டு இருப்பதாக ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டினார்.

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 4-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. 117 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் பெரும்பான் மையான இடங்களை கைப் பற்றி ஆட்சியமைக்க கட்சிகள் அனைத்தும் தீவிர நடவடிக் கைகளை மேற்கொண்டு வரு கின்றன. அங்கு ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் ஆளும் சிரோமணி அகாலிதளம்-பா.ஜனதா கூட்டணி தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதைப்போல இழந்த ஆட் சியை மீண்டும் பெற்றிட காங் கிரஸ் கட்சி கடுமையாக போராடி வருகிறது. அத்துடன் ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் பலத்த போட்டி ஏற் படுத்தும் நிலையில் களமி றங்கி உள்ளது.

இங்கு காங்கிரஸ் வேட்பா ளர்களை ஆதரித்து கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி நேற்று (27.1.2017) பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் முதல்- அமைச்சர்  வேட்பாளராக அறி விக்கப்பட்டு உள்ள அம்ரிந்தர் சிங்குடன் இணைந்து 3 கூட்டங்களில் அவர் உரையாற் றுவதற்கான திட்டம் வகுக்கப் பட்டு உள்ளது.

இதில் முதல் கூட்டம் நேற்று மஜிதாவில் நடந்தது. அதில் உரையாற்றும் போது கூறியதாவது:-

ஊழல் மற்றும் கருப்பு பணத் துக்கு எதிராக ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தை செயல்படுத் தியதாக பிரதமர் மோடி கூறி வருகிறார். தான் இனவாதத் துக்கு எதிரானவன் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

ஆனால் சிரோமணி அகா லிதள கட்சித்தலைவர்களான பாதல்களின் குடும்பம் ஊழ லில் திளைத்துப்போய் இருக்கி றது. அவர்களின் ஆட்சியில் பஞ்சாப்பில் இனவாத மோதல் களும் அதிகரித்து வருகின்றன. ஊழலை எதிர்க்கும் மோடி, பாதல்களுடன் எவ்வாறு கூட்டணி அமைக்க முடியும்? மாநிலத்தில் மதவெறியை தூண்டிவிடும் அவர்களுடன் எப்படி மேடையை பகிர்ந்து கொள்ள முடியும்? அகாலிதளத் துடன் கூட்டணி வைத்திருப்ப தன் மூலம் ஊழல் மற்றும் இனவாதத்தில் மோடியின் இரட்டை வேடம் வெளிப்பட்டு உள்ளது என்று பேசியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner