எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

அய்தராபாத், ஜன. 30- பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழலை ஒழித்து விட முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக் கும் நோக்கிலும், தீவிரவாதத் துக்கு நிதியுதவியை தடை செய் வதற்காகவும் மத்திய அரசு 1,000, 500 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றது. கடந்த நவம் பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்துக்கு மக்களி டையே ஆதரவும், எதிர்ப்பும் காணப்படுகிறது.

ஆனால் மத்திய அரசு மேற் கொண்டுள்ள பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஊழலை ஒழிக்க முடியாது என முன் னாள் நிதி அமைச்சர் ப.சிதம் பரம் கூறியுள்ளார். அய்தரா பாத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்று உரையாற் றிய அவர் இது குறித்து கூறிய தாவது:-

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கம், தீவிரவாதத் துக்கு நிதியுதவி அளித்தல் போன்றவற்றுக்கு முற்றுப் புள் ளிவைப்பதற்காக பணமதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டு உள்ளது. இதனால் மேற்கண்ட பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விடும் என்று மக்களும் நினைத்தனர்.

பணமதிப்பு நீக்க நடவடிக் கைக்கான நோக்கம் நல்லது தான். ஆனால் இந்த நோக்கம் எதுவும் நிறைவேறவில்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கை யால் ஊழல் மற்றும் கருப்பு பணத்தை ஒழிக்க முடியாது.

நாட்டுக்கு எவ்வளவு ரூபாய் நோட்டுகள் தேவை? எவ்வளவு நோட்டுகள் அச்ச டிக்க வேண்டும்? என்பது ரிசர்வ் வங்கிக்கான விவகாரமே தவிர, அரசியல்வாதிகளுக்கானது அல்ல. குறிப்பிட்ட மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை சட்டப்பூர்வமாக மதிப்பிழக்க செய்யும்போது, அது குறித்த அனைத்து அதிகாரங்களையும் ரிசர்வ் வங்கிக்கே வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்து ரைக்க வேண்டும். அதற்கேற்ப அரசு செயல்பட வேண்டும்.
ஆனால் இங்கு அரசுதான் ரிசர்வ் வங்கிக்கு பரிந்துரைத்து உள்ளது. இது தொடர்பாக அர சிடம் இருந்து வந்த கடிதத் தையும் ரிசர்வ் வங்கி ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் மறுநாளே ரிசர்வ் வங்கியின் இயக்குனர் குழு கூட்டத்தை கூட்டி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறி னார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner