எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மோடி அரசு ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்கு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது
இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கண்டனம்

அய்தராபாத், ஜன.30- பிரதமர் நரேந்திரமோடியின் ஆட்சிக் காலத்தில் தலித்/பழங்குடியினர் மீதான தாக் குதல்கள் அதிகரித்திருக்கின் றன என்று இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கூறினார்கள்.

தலித்துகள்/பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் அதிகரித் திருப்பதைக் கண்டித்து, தெலுங் கானா மாநிலத் தலைநகர் அய்தராபாத்தில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற மாபெரும் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, சிபிஅய் தேசிய செயலாளர் து.ராஜா, பி.ஆர்.அம்பேத்கரின் பேரனும் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினருமான பிர காஷ் அம்பேத்கர்ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார் கள். அப்போது அவர்கள் எப்படியெல்லாம் மத்திய மோடி அரசு, ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் கட்டளைக்கிணங்க செயல்பட்டுக் கொண்டிருக் கிறது என்பதையும், நாட்டில் இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அவர் களின் பல்வேறு தலைவர்கள் கூறிவருவதையும் எடுத்துரைத் தார்கள்.

சீத்தாராம் யெச்சூரி

சிபிஎம் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி பேசுகையில், மத்தியில் பாஜக தலைமையிலான அரசாங்கம் அமைந்தபின் தலித்துகள் மற் றும் சிறுபான்மையினருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரித்துள்ளன என்று குற்றம் சாட்டினார்.பல்கலைக்கழக வளாகங்களில் உயர்கல்வி பயிலும் தலித்துகள் பாகு பாட்டுக்கு உள்ளாவது அதி கரித்துவருகிறது என்றும், பிஎச்டி ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை இதைத்தான் காட்டுகிறது என் றும் கூறினார்.

“ஒரு விசா ரணைக் கமிஷனும் அமைக் கப்பட்டு அது தன் ஆய்வி னையும் முடித்துவிட்டது. ஆனால், அதன் பரிந்துரை களை அரசாங்கம் வெளியிடத் தயாராக இல்லை. காரணம் ஆர்எஸ்எஸ் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கொள்கைரீதியாக ஒரு நிலையினை எடுத்திருக்கிறது.”

சுதாகர் ரெட்டி

சிபிஅய் பொதுச் செய லாளர் சுதாகர் ரெட்டி பேசு கையில் சங்பரிவாரத்தின் அர சியல் அங்கமாக இருக்கும் பாஜகவிற்கு எதிரான போராட் டத்தை வலுப்படுத்தவேண்டி யது அவசியம் என்று வலி யுறுத்தினார்.

“தலித்துகள் மீதான தாக்கு தல்கள் மனுதர் மத்துடன் இணைந்தவை. இதனை இப் போது இந்துத்துவா சக்திகளும் பிரச்சாரம் செய்துகொண்டிருக் கின்றன. ரோஹித் வெமுலா வின் தற்கொலை தற்செயலான ஒன்று அல்ல. அவர் தற் கொலை செய்துகொள்ளப்பட ஏபிவிபியினால் கட்டாயப் படுத்தப்பட்டுள்ளார்” என் றும் சுதாகர் ரெட்டி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner